AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடிகளுக்கு விற்பனையா? வைரலாகும் தகவல்

Vijay Sethupathi and Mani Ratnams movie digital rights | தமிழ் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் ஓடிடி உரிமை குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடிகளுக்கு விற்பனையா? வைரலாகும் தகவல்
விஜய் சேதுபதி - சாய் பல்லவிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jun 2026 15:13 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தமிழ் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களை நாயகன்களாக வைத்து இயக்கி உள்ளார். அதன்படி மணிரத்னம் இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியான படம் தக் லைஃப். இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.

படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் மனிரத்னம் நடிகர் விஜய் சேதுபதி உடன் தனது கூட்டணியை அமைத்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஜய் சேதுபதி – சாய் பல்லவி படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்:

மணிரத்னம் அடுத்து விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 5-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் ரூபாய் 20 கோடிகளை கொடுத்து இந்தப் படத்தின் உரிமையை அந்த நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படம் தொடங்குவதற்கு முன்பே, இதன் சில வணிக ஒப்பந்தங்கள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டன. மணிரத்னம் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… முதல்வர் விஜய்க்கு பாராட்டுவிழா.. தமிழ் திரையுலகம் போட்ட திட்டம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பிளாஸ்ட் படத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு வழக்கத்திற்கு மாறான தேர்வு – பிரீத்தி முகுந்தன்!

Follow Us