AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதல்வர் விஜய்க்கு பாராட்டுவிழா.. தமிழ் திரையுலகம் போட்ட திட்டம்!

Grand Felicitation Event By Film Industry: தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து, தற்போது தமிழக முதல்வராக பதவியேற்றவர் விஜய். இவர் அரசியலில் ஈடுபாட்டை முழுவதுமாக செலுத்திவருகிறார். இவர் சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகியுள்ள நிலையில், அரசியலில் முதலமைச்சராக தனது பணியை செய்துவருகிறார். அந்த வகையில் முதல்வர் விஜய்க்கு, தமிழ் திரையுலகம் பாராட்டுவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாம்.

முதல்வர் விஜய்க்கு பாராட்டுவிழா.. தமிழ் திரையுலகம் போட்ட திட்டம்!
முதல்வர் விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 Jun 2026 19:54 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்தவர் முதல்வர் தளபதி விஜய் (CM Vijay). கடந்த 1992ம் ஆண்டில் நாளைய தீர்ப்பு (Naalaiya Theerpu) என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். இவர் சினிமாவில் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக பணியாற்றிவந்தார். இவரின் நடிப்பில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 68 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் கடைசி திரைப்படமாக வெளியாகி காத்திருக்கும் படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. மேலும் இவர் கடந்த 2024ம் ஆண்டில் அரசியல் கட்சி தொடங்கியிருந்தார். இந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் (Assembly Elections) களமிறங்கியிருந்த, மேலும் தேர்தலில் 108 தொகுதிகளை பெற்று தனித்து நின்றது.

அந்த வகையில் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைத்து, தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தற்போது தமிழக முதலமைச்சராக பணியாற்றிவரும் நிலையில், இவருக்கு தமிழ் திரையுலகம் பாராட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாம். இந்த விழாவில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகத்தை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதையும் படிங்க: நான் முதல் முதலில் சென்னைக்கு வந்த காரணமே அதுதான் – உண்மையை உடைத்த கயாடு லோஹர்!

முதல்வர் விஜய்க்கு பாராட்டுவிழா நடத்த தமிழ் திரையுலகம் முடிவு:

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக நடித்து, தற்போது அரசியலில் நுழைந்து தமிழக முதல்வராக இருந்துவருபவர் தளபதி விஜய். இவர் தற்போது மக்கள் பணியில் தீவிரமாக இருக்கும் நிலையில், சினிமாவில் இருந்துவிலகிவிட்டார். தற்போது தமிழக திரையுலகம் இவருக்கு பிரம்மாண்டமாக பாராட்டுவிழாவை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த விழாவில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஒட்டுமொத்த திரையுலகையும் இணைக்க முடிவுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க: விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் சர்ப்ரைஸ் – ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்

தமிழக முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட போஸ்டர் படக்குழு வெளியிட்ட பதிவு:

மேலும் இந்த விழாவிற்காக முதல்வர் விஜய்யின் அனுமதிக்காக, விரைவில் திரையுலகினர் சந்திக்க முடிவு செய்துள்ளனர். இந்த விழாவில், தென்னிந்திய நட்சத்திரங்கள் கலந்துகொள்ளவுள்ளார்களாம். மேலும் முதல்வர் விஜய்யுடன் பணியாற்றிய மூத்த கலைஞர்களை கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல்வரின் அனுமதி கிடைத்ததும், விழா நடக்கும் இடம், தேதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது இந்த விழா குறித்து தளபதி விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

Follow Us