AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jana Nayagan: ஜன நாயகன் ரிலீஸாகவில்லை என்றால் என்ன நடக்கும்? படக்குழுவின் அடுத்த பிளான் இதுதான்!

Jana Nayagan Movei Update: முன்னாள் நடிகரும், தமிழக முதல்வருமான தளபதி விஜய் இறுதியாக நடித்திருந்த திரைப்படம்தான் ஜன நாயகன். இப்படமானது கிட்டத்தட்ட பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான நிலையில், இணையத்தில் லீக் மற்றும் சென்சார் என பல பிரச்சனைகளில் சிக்கியிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படம் குறித்து புதிதாக தகவல்கள் வைரலாகிவருகிறது.

Jana Nayagan: ஜன நாயகன் ரிலீஸாகவில்லை என்றால் என்ன நடக்கும்? படக்குழுவின் அடுத்த பிளான் இதுதான்!
ஜன நாயகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 17 Jun 2026 08:33 AM IST

ஒட்டுமொத்த இந்திய முழுவதும் பலகோடி ரசிகர்கள் கொண்டிருப்பவர் தளபதி விஜய் (CM Thalapathy Vijay). தற்போது இவர் தமிழகத்தின் முதலமைச்சரும் கூட. சினிமாவில் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக பணியாற்றிவந்த நிலையில், தற்போது மக்கள் சேவைக்காக அரசியலில் நுழைந்துள்ளார். இவர் அரசியலில் நுழைந்த 2 வருடங்களில் முதலமைச்சர் நாற்காலியை பிடித்துவிட்டார். இவர் சினிமாவில் இறுதியாக நடித்திருந்த படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படம் ஆரம்பத்தில் தளபதி 69 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கன்னட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதை எச்.வினோத் (H. Vinoth) இயக்க, பூஜா ஹெக்டே (Pooja Hegde), பாபி தியோல், நரேன், மமிதா பைஜூ (Mamitha Baiju) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் சென்சார் பிரச்னை மற்றும் இணையத்தில் லீக் என பல பிரச்சனைகளை சந்தித்திருந்தது. இப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 5 மாதங்களை கடந்தும் சென்சார் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது படக்குழு புது திட்டம் ஒன்றை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: முன்பு எல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் போல என்று நினைத்தேன் – சமந்தா ரூத் பிரபு

மாஸ்டர் பிளானில் ஜன நாயகன் படக்குழு:

2026ம் ஆண்டு ஜூன் 19ல் இப்படத்தின் சென்சார் கிடைக்கும் என கூறப்படுகின்ற நிலையில், 2026ம் ஜூன் 26ல் வெளியிட திட்டம் இருக்கிறது. ஆனால் இப்பட வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் விற்கப்படாத நிலையில், ஜூலை 3ம் தேதிக்குள் வெளியிட திட்டம். ஆனால் இன்னும் சென்சார் கிடைக்காததால், விநியோகஸ்தரர்களின் படத்தை மீண்டும் தர தயாரிப்பு நிறுவனம் முடிவு.

மேலும் இப்படத்தின் முழு செலவையும் முதல்வர் விஜய் ஏற்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை இப்படத்தின் சென்சார் கிடைக்காவிட்டால், சென்சார் இல்லாமல் படத்தை வாங்கி ஓடிடியில் வெளியிட ஆர்வமாக இருக்கும் நிறுவனத்திற்கு விற்கப்படும் அல்லது கிடைப்பிலே போடப்படும் என கூறப்படுகிறது. இது உறுதியான தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படம் குறித்து வைரலாகும் பதிவு:

இதையும் படிங்க: ஸ்வாசிகா முதல் அஜய் திஷன் வரை.. நூறு சாமி பட கேரக்டர் அறிமுக போஸ்டர்கள் இதோ!

Follow Us