Arya: அது ஒரு சோதனை முயற்சி.. கருப்பு படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கம் குறித்து ஆர்யா பேச்சு!
Arya About Karuppu Movie : நடிகர் ஆர்யா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் சமீபத்தில் சூர்யாவின் கருப்பு படத்தில் நடித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தான் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஆர்யா மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், தயாரிப்பாளாராகவும் பிரபலமாக இருந்துவருபவர் ஆர்யா (Arya). இவரின் நடிப்பில் இறுதியாக மிஸ்டர் எக்ஸ் (Mr X) என்ற படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2026ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகியிருந்த இப்படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் இவர் மலையாளத்தில் அனந்தன் காடு (Ananthan Kaadu) என்ற திரைப்படத்தில் அதிரடி நாயகனாக நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியில் வெளியாகிறது. இப்படம் முழுக்க முழுக்க மலையாளம் மொழியை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசியிருந்த ஆர்யா, சூர்யாவின் (Suriya) கருப்பு (Karuppu) படத்தில் தான் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து மனம்திறந்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்யா, கருப்பு படத்தில் தான் சிறிய வேடத்தில் நடித்திருந்ததாக தெரிவித்திருந்தார்.




இதையும் படிங்க: தப்பா புரிஞ்சிக்கிட்டு தற்குறினு திட்டுறாங்க.. நான் என் கருத்தில் இறுதியாக இருக்கிறேன் – மாஸ்டர் மகேந்திரன் பதில்!
கருப்பு படத்தில் தான் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து மனம் திறந்த ஆர்யா:
அனந்தன் காடு ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியின்போது பேசியிருந்த ஆர்யா, அதில் “கருப்பு படத்தில் நான் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தேன். அது ஒரு பரிசோதனை முயற்சி மாதிரி. பின்னர் ஆர்.ஜே.பாலாஜி என்னை அழைத்து, நான் நடித்திருந்த காட்சி படத்துடன் ஒத்துப்போகவில்லை என்றும், அதனால அந்த காட்சியை நீக்கப்போவதாக என்னிடம் கூறினார். மேலும் வேறொரு படத்தின் நாம் இணைந்து பணியாற்றுவோம்” என அதில் அவர் கூறியிருந்தார். தற்போது இது தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: முன்பு எல்லாம் சினிமா ஒரு ஓட்டப்பந்தயம் போல என்று நினைத்தேன் – சமந்தா ரூத் பிரபு
கருப்பு படத்தில் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது பற்றி ஆர்யா பேசியிருந்த வீடியோ பதிவு:
I did a small role, it was an experimental attempt. RJB later called me & said it didnt get along with the film,so going to remove those scenes We will work together later in another projectpic.twitter.com/7yjlNSrL0k
— Movie Tamil (@_MovieTamil) June 16, 2026
நடிகர் ஆர்யாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம்தான் அனந்தன் காடு. இப்படமானது விடுதலை போராட்டத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் முழுக்க ஆக்ஷன் படமாக தயாராகியுள்ளது. இதை மலையாள இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூன் 25ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.