AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யாவின் 50வது படத்தை இயக்கும் கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர்? அட இவர்தான்!

Suriya 50th Film Director Update: கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக வளர்ந்திருப்பவர் சூர்யா. இவர் ரசிகர்களால் தி ஒன் என்றும் அழைக்கப்பட்டுவருகிறார். இவரின் நடிப்பில், தொடர்ந்து புது படங்கள் உருவாகிவரும் நிலையில், இவரின் 50வது படத்தை எந்த இயக்குநர் இயக்கவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

சூர்யாவின் 50வது படத்தை இயக்கும் கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர்? அட இவர்தான்!
சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Jun 2026 08:21 AM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு (Karuppu). இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் (RJ Balaji) இயக்கத்தில் வெளியான இப்படமானது வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை தொடர்ந்ததாக சூர்யா தற்போது பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவனின் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா47 (Suriya47) என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படமானது முழுக்க ஆக்ஷன், ரோமெண்டிக் கதைக்களம் கொண்ட படமாக தயாராகிவருகிறது. இப்படத்தில் சூர்யா அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துவருகிறார்.

இதை சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனமான “ழகரம் ஸ்டூடியோஸ்” நிறுவனமானது சிறப்பாக தயாரித்துவருகிறது. இப்படத்தை தொடர்ந்து சூர்யாவை எந்தெந்த இயக்குநர்கள் இயக்குகிறார்கள் என இணையத்தில் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் தற்போது சூர்யாவின் 50வது படத்தினை யார் இயக்கவுள்ளார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: நான் படத்திற்காக உழைக்கவில்லையா? திருப்பூர் சுப்புரமணியமுக்கு ஆர்.ஜே.பாலாஜி பதிலடி!

சூர்யாவின் 50வது படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார்:

சூர்யாவின் 48வது படத்தை ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் ராஜா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இடத்தியடுத்து இயக்குநர் பா. ரஞ்சித் (Pa.Ranjith) சூர்யாவின் 49வது படத்தை இயக்கபோவதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த வரிசையில் சூர்யாவின் 50வது படத்தை கோலிவுட் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அல்லு அர்ஜுன் – அட்லீயின் ராக்கா பட ரிலீஸ் எப்போது இருக்கும்? – வைரலாகும் தகவல்!

இப்படமானது டார்க் காமெடி மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகிவருவதாக கூறப்படுகிறது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனம் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்த பேச்சுவார்த்தைகளை நடைபெற்றுவருகிறதாம். ஆனால் இன்னும் உறுதியாகவில்லை என கூறப்படுகிறது.

சூர்யாவின் 50வது படத்தின் இயக்குநர் குறித்து வைரலாகும் பதிவு:

சூர்யா தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் தனது 47வது படத்தில் நடித்துவருகிறார். இப்படமானது சிறப்பாக தயாராகிவரும் நிலையில், வரும் 2027ம் ஆண்டில் வெளியாகவுள்ளதாம். மேலும் 2026ம் ஆண்டில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us