AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ

Viswanath & Sons Movie First Single Promo Update | நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் & சன்ஸ். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் புரோமோ குறித்து ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ
ஜிவி பிரகாஷ் மற்றும் மமிதா பைஜூImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 15 Jun 2026 12:48 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த வகையில் கடந்த மே மாதம் சூர்யாவின் நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் அடுத்தாக நடிகர் சூர்யா நடிப்பில் 46-வது படமாக உருவாகி உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும் இவரகளுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி நடிகர் சூர்யாவின் இந்த விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முன்னதாக இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படம் அவர்கள் இருவரும் இணைந்த மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

17-ம் தேதி வெளியாகிறது விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முதல் சிங்கிள் புரோமோ:

இந்த நிலையில் தொடர்ந்து இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படம் தொடர்பான அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த அப்டேட்டை வீடியோ வெளியிட்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அறிவித்துள்ளார். அதன்படி முதல் சிங்கிள் வீடியோவின் புரோமோவை வருகின்ற 17-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாடல் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… நா பொறந்த ஊருல நடந்த உண்மை கதை இது – நூறு சாமி படம் குறித்து வியந்து பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்தது பெத்தி படம்

Follow Us