நா பொறந்த ஊருல நடந்த உண்மை கதை இது – நூறு சாமி படம் குறித்து வியந்து பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
Director AR Murugadoss Praised Nooru Saami Movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் சமீபத்தில் நூறு சாமி படத்தைப் பார்த்துவிட்டு படம் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பான்மையன படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவில் இறுதியாக இயக்கிய படம் மதராஸி. நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் படத்தை தொடர்ந்து தனது அடுத்தப் படத்திற்கான பணிகளில் பிசியாக இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற நூறு சாமி படத்தின் விழாவில் அந்தப் படம் குறித்துபேசியது இணையத்தி வைரலாகி வருகின்றது.
மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சசி எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் நடிகை சுவாஸிகா நாயகியாக நடித்து உள்ளார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் வருகின்ற 19-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




நூறு சாமி படம் குறித்து வியந்து பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்:
நா பொறந்த ஊருல நடந்த உண்மை கதை இது ரொம்ப கஷ்டமா கதை எப்பிடி எடுப்பாருனு தெரியல!கிளைமாக்ஸ் எதது பண்ணா கோவபட்டிருப்பேன் ஆனால் ரொம்ப நாளா எடுத்துருந்தாரு சோபான மேம் பாக்குற மாரி இருந்தாச்சு ஸ்வாசிகாவ பாக்கும் போது. இந்த வருடம் ராதிகா மேம்-கு உங்களுக்கும் தான் போட்டி. எனக்கு சீனியர் சசி சார், உனக்கு எப்போ பிரச்சனா இருந்தாலும் நேருல வந்து பாருனு சொன்னாரு. எனக்கு மனசுக்கு ரொம்ப நெருக்காமா ஆகிடுச்சு. இந்த படம் பாருங்க என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… லீ மான்ஸில் குடும்பத்தினருடன் நடிகர் அஜித் – வைரலாகும் போட்டோஸ்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Dir #ARMurugadoss about #Noorusami
Na porantha oorula nadantha unmaya kadhai ithu!
Romba kastama kadha epudi edutharunu theriyalaa!Climax ethathu pannaa kova patturupen but romba nala eduthurunthaaru
Sobana mam paakura mari iruntahthu swasika va paakum pothu. Intha year… pic.twitter.com/YtyXaQYC1i
— Movie Tamil (@_MovieTamil) June 12, 2026