AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ajith: ரேஸராக அஜித்.. கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!

Ajith Kumars Gladiators Documentary: தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டில் எந்த படங்களும் வெளியாகவில்லை என்ற நிலையில், ஆவணப்படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் கிளாடியேட்டர்ஸ் என்ற ஆவணப்படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.

Ajith: ரேஸராக அஜித்.. கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரல்!
கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் முதல் பார்வைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Aug 2026 15:04 PM IST

தென்னிந்திய சினிமாவட்டரங்களில் நடிகராகவும், கார் ரேஸராகவும் மிகவும் பிரபலமானவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good bad Ugly). கடந்த 2025ம் ஆண்டு வெளியாகியிருந்த இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியான இப்படமானது சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்திருந்தது. இப்படத்திற்கு பின் கார் ரேஸில் தீவிரம் காட்டிவந்த அஜித் குமார், தனது கார் ரேஸ் பயிற்சி மற்றும் போட்டிகளில் கலந்துகொண்டுவந்தார். மலேசியா முதல் ஐரோப்பா வரை பல்வேறு இடங்களில் நடைபெற்றிருந்த கார் ரேஸ் போட்டிகளில் தனது அணியுடன் கலந்துகொண்டு வெற்றிபெற்றுகிறார்.

இந்த கார் ரேஸ் பயிற்சி மற்றும் போட்டிகளை, அஜித் குமார் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். இதை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்க, ஷாலினி அஜித் குமார் தயாரிப்பாளாராக தயாரித்துவருகிறார். இந்த “கிளாடியேட்டர்ஸ்” (Gladiators) ஆவணப்படமானது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இதன் முதல் பார்வை போஸ்டரை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 25 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ஷாலினி அஜித் குமார்!

அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் முதல் பார்வைப் பதிவு:

கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:

அஜித் குமாரின் ரேஸ் பயிற்சி மற்றும் போட்டிகளை இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். இது அஜித்குமார் ரேஸில் நடந்த நிஜ சம்பவங்களை உள்ளடக்கிய ஆவணபாடமாக உருவாக்கபோட்டுவருகிறது. இதன் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இந்த ஆவணப்படத்தை ஷாலினி அஜித் குமார் கோல்டன் டிராஃபி பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: தனது எக்ஸ் பக்கத்தில் திடீரென திருக்குறள் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் – அர்த்தம் என்ன தெரியுமா?

இந்த ஆவணப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பணியாற்றிவரும் நிலையில், சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த ஆவணப்படமானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுவருகிறதாம்.

அஜித் குமார் நடிக்கும் புது படம் :

அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர் டெவில் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, ஷாலினி அஜித் குமார் தயாரிக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராக பணியாற்றவுள்ளார். AK64 என அழைக்கப்பட்டுவந்த இப்படத்திற்கு டேர் டெவில் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது.

Follow Us