தனது எக்ஸ் பக்கத்தில் திடீரென திருக்குறள் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் – அர்த்தம் என்ன தெரியுமா?
Nivetha Pethuraj | தென்னிந்திய மொழிகளில் தற்போது பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து இவர் குறித்த செய்திகள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள திருக்குறள் குறித்த அர்த்தத்தை தேடி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடிகையாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதன்படி தமிழ் சினிமாவில் வெளியான ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்தப் படத்தில் பல நடிகர்கள் அறிமுகம் ஆகி இருந்தாலும் அடியே அழகே என்ற பாடலின் மூலமாக மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தார் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் வரிசையாக படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ரவி மோகன், விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி என பலருக்கு ஜோடியாக நடித்து உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிசியான நாயகியாக வலம் வந்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவிலும் அதிக அளவில் கவனத்தை செலுத்தி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக நடிகை நிவேதா பெத்துராஜ் தெலுங்கு மொழியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக அறிவித்த நடிகை சில நாட்களிலேயே அந்த திருமணம் நடைபெறாது என்று செய்தி வெளியானது. மேலும் தனது காதலுரடன் போட்ட புகைப்படங்களையும் நடிகை நிவேதா பெத்துராஜ் சமூக வலைதள பக்கத்தில் இருந்து நீக்கினார். தொடர்ந்து படம் தொடர்பாகவும் இவரது சொந்த வாழ்க்கை தொடர்பாகவும் செய்திகள் இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




எக்ஸ் பக்கத்தில் திடீரென திருக்குறள் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ்:
இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் திடீரென ஒரு திருக்குறளை பதிவு செய்துள்ளார். அவர் பதிவிட்ட திருக்குறள் என்பது, ”புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்” என்று தெரிவித்துள்ளார். இதன் அர்த்தம் என்ன என்றால் ஒருவர் அருகில் இல்லாத போது அவர் குறித்து தவறாக பேசிவிட்டு அவர் இருக்கும் போது நண்பர் போல பேசி வாழும் வாழ்க்கையைவிட வாழாமல் இருப்பதே மேல் என்பதே ஆகும். இந்த திருக்குறளை அவர் தற்போது வெளியிட்டது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… இந்த வருஷம் என்னோட பர்த்டேவ கொண்டாடல.. ஆனால் – சூர்யா பகிர்ந்த விஷயம்!
நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.– திருக்குறள் 183
— Nivetha Pethuraj (@Nivetha_Tweets) August 4, 2026
Also Read… சிலம்பரசனின் அரசன் திரைப்பட ஷூட்டிங் எப்போது நிறைவடையும்? – வைரலாகும் தகவல்!