AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிலம்பரசனின் அரசன் திரைப்பட ஷூட்டிங் எப்போது நிறைவடையும்? – வைரலாகும் தகவல்!

Arasan Movie Shooting Update: கோலிவுட் சினிமாவில் மாபெரும் இயக்குந`ர்களில் ஒருவராக இருந்த்துவருபவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துவரும் புது படம்தான் அரசன். அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதையில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் எப்போது நிறைவடையும் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிலம்பரசனின் அரசன் திரைப்பட ஷூட்டிங் எப்போது நிறைவடையும்? – வைரலாகும் தகவல்!
அரசன் திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 03 Aug 2026 16:49 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் நாயகனாக இருந்துவருபவர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இறுதியாக இவர் இயக்குநர் மணிரத்னம் (Mani Rathnam) இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படத்தில் முக்கிய நாயகனாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த படத்திற்கு பின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் (Ramkumar Balakrishnan) இயக்கத்தில் புதிய படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் முழுமையாக கைவிடப்பட்டது. அந்த விதத்தில், வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கத்தில் அரசன் (Arasan) என்ற திரைப்படத்தில் உடனடியாக சிலம்பரசன் இணைந்திருந்தார்.

இந்த படமானது தனுஷின் வட சென்னை (Vada Chennai) பட டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையாகும். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதிமுதல் நடைபெற்றுவரும் நிலையில், இதன் ஷூட்டிங் எப்போது நிறைவடையும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: வாரணாசி பட ஷூட்டிங் 80 சதவீதம் ஓவர் – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கொடுத்த அப்டேட்!

வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனின் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது முடியும்:

சிலம்பரசன் இந்த படத்தில் அரசன் என்ற வேடத்தில் நடித்துவருகிறாராம். இந்த படமானது மதுரை மற்றும் சென்னை போன்ற இடங்களை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் தொடங்கப்பட்ட நிலையில், சிறப்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் சிறப்பாக நடைபெற்றுவருகிறதாம்.

இதையும் படிங்க: உறுதியானது நடிகர் கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜாவின் கூட்டணி… வைரலாகும் அப்டேட்

இறுதிக்கட்டத்தில் இப்படத்தின் ஷூட்டிங் இருக்கும் நிலையில், படத்தின் எடிட்டிங் பணிகளும் நடைபோற்றுவருகிறது. அந்த விதத்தில் அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆகஸ்ட் மாதத்தின் இறுதிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையேடு ராஜன் வகையறா படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

சிலம்பரசனின் அரசின் திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்து வைரலாகும் பதிவு:

அரசன் திரைப்படத்திற்கு பின் சிலம்பரசன் இணையும் படம் :

அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தனது அடுத்த படத்திற்கான கதையை சிலம்பரசன் கேட்டுவருகிறாராம். அவர் அரசன் படத்திற்கு பின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR51 படத்தில் இணைவார் என கூறப்பட்டது. தற்போது அஸ்வத் மாரிமுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் படத்தை இயக்கிவரும் நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, பின் சிம்புவு இணைவாராம். இதற்கிடையே சிம்பு, டியூட் பட இயக்குநர் கீர்த்திஸ்வரனின் இயக்கத்தில் புது படத்தில் இணைவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us