உறுதியானது நடிகர் கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜாவின் கூட்டணி… வைரலாகும் அப்டேட்
Director Mohan Raja next with actor Karthi | தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலமானவராக வலம் வருபவர் இயக்குநர் மோகன் ராஜா. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே அக்வனத்தை ஈர்த்து வருகின்றது.
பழம்பெரும் எடிட்டர் மோகன் அவர்களின் இரண்டு மகன்களும் தற்போது சினிமாவில் பிரபலமாக இருக்கிறார்கள். அப்படி முதல் மகன் மோகன் ராஜா சினிமாவில் இயக்குநராகவும் ரவி மோகன் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமாவில் தற்போது பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மூத்த மகன் மோகன் ராஜா தெலுங்கு சினிமாவில் தான் முதன் முறையாக இயக்குநராக அறிமுகம் ஆனார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் இவர் இயக்குநராக தனது பணியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் 25 ஆண்டுகள் பயணித்து உள்ள இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் பல ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இயக்குநர் மோகன் ராஜா எழுதி இயக்கிய படம் காட் ஃபாதர். தெலுங்கு சினிமாவில் உருவான இந்தப் படம் கடந்த 2022-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் சிரஞ்சீவி நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் மோகன் ராஜா இயக்க உள்ள புதுப் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.




உறுதியானது கார்த்தி – மோகன் ராஜாவின் கூட்டணி:
அதன்படி இயக்குநர் மோகன் ராஜா தற்போது நடிகர் கார்த்தி உடன் கூட்டணி வைத்துள்ளார். இவர்கள் இணைந்து பணியாற்ற உள்ள படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்க உள்ளார். இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… அமெரிக்கன் படத்தை ரீமேக் செய்கிறாரா இயக்குநர் மணிரத்னம்? இணையத்தில் வைரலாகும் தகவல்
இயக்குநர் மோகன் ராஜா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
By the blessings of my parents, my family, and all your love, I’ve always been showered with good work.
Now, my 11th directorial in the 25th year of my career becomes even more special —
as I join hands with my dear brother, @Karthi_OfflProduced by @Prince_Pictures
And to… pic.twitter.com/yGs1hyQxbh
— Mohan Raja (@jayam_mohanraja) August 3, 2026
Also Read… கார்த்தியின் 30வது படத்தில் இசையமைப்பாளராக இணைந்த தேவி ஸ்ரீ பிரசாத் – வெளியான அறிவிப்பு!