AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சார்பாட்ட 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் – நடிகை துஷாரா விஜயன் கொடுத்த அப்டேட்

Dushara Vijayan talks about Saprtatta parambarai 2 movie shooting | தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வருபவர் நடிகை துஷாரா விஜயன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சார்பாட்டா 2 படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சார்பாட்ட 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் – நடிகை துஷாரா விஜயன் கொடுத்த அப்டேட்
சார்பாட்ட 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Aug 2026 16:09 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை துஷாரா விஜயன். இவர் சார்ப்பாட்டா பரம்பரை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து இருந்தாலும் முன்னதாக இவர் நடிகர் விஜயின் சர்க்கார் படத்தில் பெயரிடப்படாத கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இது சமீபத்தில் நடிகை துஷாரா விஜயன் அளித்தப் பேட்டி மூலம் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. நடிகை துஷாரா விஜயன் சார்பாட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலம் ஆகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் அவர் நாயகியாக அறிமுகம் ஆன படம் என்னவோ போதை ஏறி புத்தி மாரி என்ற படம் தான் ஆகும். இந்தப் படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் நடிகை துஷாரா விஜயன் பிசியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கட்டாளன். மலையாள சினிமாவில் வெளியான இந்தப் படத்தில் நடிகை துஷாரா விஜயனின் நடிப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது. மேலும் தற்போது நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படங்கள் ஜிடி நாய்டு மற்றும் மகுடம் ஆகியப் படங்கள் ஆகும். இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சார்பாட்ட 2 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்:

இந்த நிலையில் நடிகை துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த பேட்டியில் அவர் பேசியதாவது, ‘சார்பட்டா 2’ படப்பிடிப்பு இந்த மாதமே தொடங்குகிறது. நான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன்; இது முதல் பாகத்தின் கதைக்கு முந்தைய காலகட்டத்தைச் சொல்லும் படமாக (prequel) அமையவுள்ளதால், இது எப்படி உருவாகப்போகிறது என்பதைப் பார்க்க நானும் ஆவலாக உள்ளேன். மாரியம்மா மீண்டும் வருகிறார். கோவிட் சூழல் காரணமாக ‘சார்பட்டா’ முதல் பாகம் ஓடிடி (OTT)-யில் வெளியானது, ஆனால் இந்தப் படம் திரையரங்குகளில் முறையாக வெளியாகவுள்ளது என்று நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்.

Also Read… Simran: அது ஒரு முன்னோட்டம் மட்டுமே.. ரஜினியுடன் தர்மன் படத்தில் நடிப்பது குறித்து பகிர்ந்த நடிகை சிம்ரன்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Im Game: சூதாட்டம் கதைக்களத்தில்.. வெளியானது துல்கர் சல்மானின் ‘ஐஅம் கேம்’ பட ட்ரெய்லர்!

Follow Us