AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Im Game: சூதாட்டம் கதைக்களத்தில்.. வெளியானது துல்கர் சல்மானின் ‘ஐஅம் கேம்’ பட ட்ரெய்லர்!

Im Game Movie Trailer: மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம்தான் ஐஅம் கேம். இயக்குநர் நஹாஸ் ஹிதயத் இயக்க, அதிரடி கேம்ப்ளிங் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று (30/07/2026) துல்கர் சல்மான் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Im Game: சூதாட்டம் கதைக்களத்தில்.. வெளியானது துல்கர் சல்மானின் ‘ஐஅம் கேம்’ பட ட்ரெய்லர்!
ஐஅம் கேம் திரைப்பட டிரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Jul 2026 18:15 PM IST

தென்னிந்திய திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் படங்களை உருவாக்கிவருபவர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. இந்த வரிசையில் இவர் கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கு பின், மலையாளத்தில் நடித்துள்ள புது படம்தான் ஐஅம் கேம் (Im Game). இதை மலையாள இயக்குநர் நஹாஸ் ஹிதயத் (Nahas Hidhayath) இயக்க, துல்கர் சல்மான் தனது வேஃபரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கும் கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேல் நடைபெற்றுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் துல்கர் சல்மான் சூதாட்ட நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார்.

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில், 2026ம் ஆண்டு ஜூலை 28ம் தேதியில் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடுவதாக கூறப்பட்ட நிலையில், பின் ஒத்தவைக்கப்பட்டது. தற்போது இன்று (30/07/2026) ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவானார் நடிகர் கவின் – குவியும் வாழ்த்து

துல்கர் சல்மானின் ஐஅம் கேம் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ஐஅம் கேம் படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன், மிஷ்கின், கதிர், அந்தோணி வர்கீஸ் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அது ஒரு முன்னோட்டம் மட்டுமே.. ரஜினியுடன் தர்மன் படத்தில் நடிப்பது குறித்து பகிர்ந்த நடிகை சிம்ரன்!

இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், படத்திலிருந்து தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது. மேலும் விரைவில் இப்படத்திலிருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துல்கரின் நடிப்பில் மலையாளத்தில் பல நாட்களுக்கு பின் வெளியாகும் படம் என்ற நிலையில், ஐஅம் கேம் படம் நிச்சயம் வெற்றிபெறும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us