AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகர் சூரியின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

Sources said Actor Sooris next movie budget is 60 Cr rupees | தமிழ் சினிமாவில் பிரபல நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூரி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் பட்ஜெட் குறித்த தகவல்கள் இனையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் சூரியின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்
நடிகர் சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jul 2026 15:25 PM IST

தமிழ் சினிமாவில் பெயரிடப்படாத கதாப்பாத்திரங்களில் நடிப்பதன் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் சூரி. அதனைத் தொடர்ந்து சின்ன சின்ன கமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு பெரிய காமெடி நடிகராக உருவெடுத்தார். இவர் காமெடியனாக நடிக்கும் படங்கள் ரசிகர்கலிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் சூரி பிறகு கோலிவுட் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் நாயகனாக நடிக்கத் தொடங்குவதற்கு முன்பு தனது உடல் எடையை மிகவும் கட்டுக்கோப்பாக மாற்றி ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இவர் நாயகனாக நடித்த போது ரசிகர்கள் அதனை வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து சீரியசான கதைகளில் நடித்து வருகிறார். அதன் காரணமாகவே அவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாமன் படத்தை எடுத்தனர். அந்தப் படத்தின் மூலம் சூரி திரைப்பட கதையாசிரியராக மாறினார். அதனைத் தொடர்ந்து தற்போது சூரி மண்டாட்டி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிக்க உள்ளார். அந்தப் படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகர் சூரியின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா?

சூரி மற்றும் ரவிக்குமார் இணையும் இப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் ரூபாய் 60 கோடி என்று கூறப்படுகிறது. 2018-ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை மையமாகக் கொண்ட இப்படம், வலுவான திரைக்கதையுடன் கூடிய உணர்வுப்பூர்வமான கதையைக் கொண்டுள்ளது. அதேவேளையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த நகரமும் அடித்துச் செல்லப்பட்ட பேரழிவைச் சித்தரிக்கும் வகையில், ரவிக்குமாரின் பிரம்மாண்டமான காட்சி அமைப்போடு இப்படம் உருவாக்கப்படவுள்ளது. இப்பேரிடரின் தீவிரத்தை தத்ரூபமாக மீண்டும் திரையில் கொண்டுவர, பட்ஜெட்டில் பெரும்பகுதி VFX பணிகளுக்காகச் செலவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சூரி, நகர்ப்புறப் பின்னணியில் அமைந்த ஒரு நாயகனுக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகின்றது.

Also Read… சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ஆடியோ லான்ச் எப்போது? – வைரலாகும் தகவல்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… AL Vijay: அது அஜித் குமார் சாரோட கனவு திட்டம் – இயக்குநர் ஏ.எல்.விஜய் ஓபன் டாக்!

Follow Us