சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட ஆடியோ லான்ச் எப்போது? – வைரலாகும் தகவல்!
Viswanath and Sons Audio Launch: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பிலும் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்திலும் புதிதாக உருவாகியுள்ள படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்பது குறித்து இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் கருப்பு. இப்படத்திற்கு பின் சூர்யாவின் நடிப்பில் உருவாகிவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இதை இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்க, தயாரிப்பாளர் நாக வம்சி (Naga Vamshi) தயாரித்துள்ளார். இது இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் உருவாகியுள்ள நேரடி தமிழ் திரைப்படமாகும். இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க அவருக்ககு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இந்த ஜோடி இப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்திருக்கும் நிலையில், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது.
இந்த படத்திற்கு இசையாய்ப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ள நிலையில், இதுவரை 2 பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது மற்றும் எங்கு நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: நீங்கள் என் மீது வைத்த அளவற்ற நம்பிக்கைக்கு நன்றி விஜய் சார் – அனிருத் ரவிச்சந்தர்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது:
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையமைப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படத்திலிருந்து பட்டாம்பூச்சி மற்றும் தி வெட்டிங் சாங் என இரு பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில், இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இதையும் படிங்க: தளபதி விஜயின் தி கோட் படத்தில் நடிக்க என்ன காரணம்? நடிகை மீனாட்சி சௌத்ரி விளக்கம்
அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அது குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தி இசை வெளியீட்டு விழா அவரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதியில், சென்னை ஸ்ரீ ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளதாம். தற்போது இது குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
*Sri Ram college*
— Movie Tamil (@_MovieTamil) July 27, 2026
இந்த படமானது வயது வித்தியாச காதல் குறித்து உருவாக்கப்பட்டுள்ள படம் இதில் சூர்யா 40 வயது தொழிலதிபராகவும், அவரை காதலிக்கும் 20 வயது பெண்ணாக மமிதா பைஜூ நடித்துள்ளார். இந்த சிறப்பான கதைக்களம் கொண்ட படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு படத்தை போலவே சூர்யாவிற்கு இப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.