AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: தி வெட்டிங் சாங்.. சூர்யா- மமிதாவின் நடனத்தில் வெளியானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட 2வது பாடல்!

The Wedding Song Out: தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள புத்தம் புது படம்தான் விஸ்வநாத் அன்ஸ் சன்ஸ். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், சூர்யாவின் குரலில் தி வெட்டிங் சாங் என்ற பாடல் வெளியாகியுள்ளது.

Suriya: தி வெட்டிங் சாங்.. சூர்யா- மமிதாவின் நடனத்தில் வெளியானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட 2வது பாடல்!
தி வெட்டிங் சாங் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 Jul 2026 17:36 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Son). இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் சூர்யா46 என தற்காலிக டைட்டிலில் அறிவிக்கப்பட்டது. அதற்கு பின் சில மாதங்களுக்கு முன், இப்படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக டீசர் வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூர்யா பிரபலமான தொழிலதிபராக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இப்படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி (venky Atluri) இயக்கியுள்ளார். மேலும் சித்தாரா என்டேர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார்.

இவரின் இசையில் ஏற்கனவே “பட்டாம்பூச்சி” என்றபாடல் வெளியான நிலையில், தற்போது “தி வெட்டிங் சாங்” (The Wedding Song) என்ற 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை நடிகர் சூர்யா பாடியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: கருப்பு பட கதையை சூர்யா சார் சொல்லும் போது மிகவும் பிடித்தது – இயக்குநர் வெங்கி அட்லூரி

தி வெட்டிங் சாங் குறித்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் இசைக்க, சூர்யா பாடியுள்ளார். அவருடன் பாடகி இணைந்து பாட, இப்பாடலின் வரிகளை கென் கருணாஸ் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே யூத் படத்தின் சில பாடல்களின் வரிகளை, குறிப்பாக முட்ட கலக்கி பாடலின் வரிகளையும் இவர்தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனின் பர்த்டே.. வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன டியூட் பட இயக்குநர்!

தற்போது வெளியான தி வெட்டிங் சாங் என்ற பாடலில் மமிதா பைஜூ மற்றும் சூர்யா இணைந்து நடனமாடிவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. விரிக்க வீடியோவாக வெளியான இந்த பாடல் இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட இசைவெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் அப்டேட்:

இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. குறிப்பாக இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழக திரையரங்குகள் ரிலீஸ் உரிமையை இயக்குநரும், தயாரிப்பாளருமான லிங்குசாமி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் தொடக்கத்தில் நடைபெறவுள்ளதாம். மேலும் இதன் ட்ரெய்லர் ஆகஸ்ட் 6 அல்லது 7ம் தேதிக்கும் மேல் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us