கருப்பு பட கதையை சூர்யா சார் சொல்லும் போது மிகவும் பிடித்தது – இயக்குநர் வெங்கி அட்லூரி
Director Venky Atluri talks about Karuppu movie | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கருப்பு. இந்தப் படம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து அதிக அளவில் பேசப்பட்டு நாயகனாக வலம் வருகிறார். அது மட்டும் இன்றி இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக கருப்பு படம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கிய இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் நடிகர் சூர்யாவின் சினிமா கெரியரில் அதிக அளவில் வசூல் செய்த படம் என்று சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சூர்யா 47 மற்றும் சூர்யா 48 ஆகியப் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் வெங்கி அட்லூரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் நிலையில் தற்போது அளித்தப் பேட்டி ஒன்றில் கருப்பு படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




கருப்பு பட கதையை சூர்யா சார் சொல்லும் போது மிகவும் பிடித்தது:
அதன்படி இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியதாவது, சூர்யா சார் என்னிடம் ‘கருப்பு’ படத்தைப் பற்றிக் கூறியபோது, அந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மக்களைக் காப்பாற்ற ஒரு தெய்வம் வருவது என்பது உண்மையிலேயே ஒரு வலிமையான கருப்பொருள். குறிப்பாக, இப்படத்தில் இந்திரன்ஸ் சார் ஏற்று நடித்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் ஒரு கட்டத்தில், அவரது நடிப்பைப் பார்த்து நான் கண்ணீர் விட்டேன்; அவரை எப்போது நேரில் சந்திப்பேன் என்று ஆவலாகக் காத்திருந்தேன்.
அவரது நடிப்பு என் மனதை அவ்வளவு ஆழமாகத் தொட்டதால், அவரது கால்களில் விழுந்து வணங்க வேண்டும் என்று கூட எனக்குத் தோன்றியது. சூர்யா சார் பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருந்தார்; திரையில் அவர் உண்மையிலேயே ஒரு தெய்வத்தைப் போலவே தெரிந்தார். திரையரங்கில் மற்ற பார்வையாளர்களுடன் இணைந்து அந்தத் திரைப்படத்தின் சிறப்பான தருணங்களை நான் முழுமையாக ரசித்தேன். நான் ‘கருப்பு’ படத்தை இரண்டு முறை பார்த்தேன் – முதலில் திரையரங்கிலும், பின்னர் ஓடிடியிலும் பார்த்தேன். இரண்டு முறையுமே இப்படத்தை நான் ரசித்ததோடு, ஒட்டுமொத்த அனுபவத்தையும் மிகவும் விரும்பினேன்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Dir #VenkyAtluri about Karuppu
– I really loved the idea of #Karuppu when #Suriya sir told me about it. The concept of a god coming to save the people is truly powerful.
– I especially loved #Indrans sir’s character in Karuppu. After a certain point in the film, I was in tears… pic.twitter.com/kSRGHR4Xqj
— Movie Tamil (@_MovieTamil) July 24, 2026
Also Read… பெத்லகேம் குடும்ப யூனிட் படத்திலிருந்து வெளியானது மாந்த்ரிகம் லிரிக்கள் வீடியோ