லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Love Oh Love Movie OTT Release Update Here | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த படம் லவ் ஓ லவ். இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருபவர் நடிகர் பவிஷ் நாராயணன். சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருபவர் நடிகர் பவிஷ் நாராயண். இவர் இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகள் வழி பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா குடும்பத்தை சேர்ந்த நடிகர் பவிஷ் நாராயண் நாயகனாக அறிமுகம் ஆவது மிகவும் எளிதாக கிடைத்துவிட்டது என்று விமர்சனங்கள் இருந்தாலும் தனது நடிப்பை மக்கள் வரவேற்க வேண்டும் என்று கடினமாக உழைத்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் பவிஷ் நாராயண் நடிப்பில் இரண்டாவதாக திரையரங்குகளில் வெளியான படம் லவ் ஓ லவ் படம். இந்தப் படம் கடந்த 10-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.
படத்தை இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கி உள்ளார். ரொமாண்டிக் காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் பவிஷ் நாராயணன் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு புதுப் படம் வெளியாகிறது என்றால் அந்தப் படம் 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும். ஆனால் இந்தப் படம் அப்படி இல்லை.




லவ் ஓ லவ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
ஆம் படம் திரையரங்குகளில் கடந்த 10-ம் தேதி வெளியான நிலையில் தற்போது வருகின்ற 31-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு ஓடிடியில் வெளியாக உள்ளது. படம் வெளியாகி மூன்று வாரங்கள் மட்டுமே முடிவடையும் போது ஓடிடியில் வெளியாக உள்ளது. இது படக்குழுவிற்கு சற்று சோகமான விசயம் என்றாலும் படத்தை தியேட்டரில் பார்க்காக ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விசயம் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… கான் சிட்டி முதல் பள்ளிச்சட்டம்பி வரை… நாளை ஓடிடியில் வெளியாகும் தென்னிந்திய படங்களின் லிஸ்ட் இதோ
நடிகர் செல்வராகவன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
This July, let love find you. ❤️
#LoveOhLove premieres July 31 on @PrimeVideoIN ❤️#LoveOhLoveOnPrime@zinemaindia @creativeentoffl @dineshrajoffl @dhananjayang @thinkmusicindia @PrimeVideoIN @Tentkotta @Pavishvofficial @nagadurgaoffl @alyekmaliya @foxnmusic @DirectorMysskin… pic.twitter.com/SgxjgqeTbQ
— selvaraghavan (@selvaraghavan) July 24, 2026