ஜெர்மனியில் அரசன் ரீயூனியன்… இணையத்தில் வைரலாகும் சிலம்பரசன் – ஆண்ட்ரியா போட்டோஸ்!
Andrea Jeremiah And STR: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்துவருபவர் சிலம்பரசன். இவர் சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்றிருந்த இசை கான்செர்ட் ஒன்றில் கலந்துகொண்டிருந்த நிலையில், அதில் நடிகை ஆண்ட்ரியா சிலம்பரசனை சந்தித்தது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் நடிகையாகவும், பாடகியாகவும் இருந்துவருபவர் நடிகை ஆண்ட்ரியா (Andrea Jeremiah). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்க். இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) தயாரிப்பில் வெளியான இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் தமிழில் புதிய படங்களிலும் நடித்துவருகிறார். மேலும் இவரின் நடிப்பில் பிசாசு 2 (Pisaasu 2) மற்றும் மனுஷி போன்ற படங்கள் தயாராகி இன்னும் வெளியாகாமல் உள்ளது. மேலும் தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் (Arasan Movie) திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வட சென்னை (Vada Chennai) பின்னணி கதையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதில் சந்திரா என்ற வேடத்தில் அவர் நடித்திருக்கிறார்.
அந்த விதத்தில் சமீபத்தில் சிலம்பரசனுடன் ஜெர்மனியில் நடைபெற்றிருந்த மியூஸிக் கான்சர்ட் ஒன்றில் பங்குபெற்றிருந்தார். அதில் சிலம்பரசனுடன் இருக்கும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: பேக் டூ பேக் நெருப்பான கேள்விகள்… போட்டியாளர்கள் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்ட கேள்வி – வைரலாகும் ப்ரோமோ!
சிலம்பரசனுடன் இருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோவை பகிர்ந்து ஆண்ட்ரியா:
View this post on Instagram
இந்த பதிவில் நடிகை ஆண்ட்ரியா, “ஜெர்மனியில் அரசன் ரீயூனியன்” என அதில் பகிர்ந்துள்ளார். தற்போது இது தொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகர் சிலம்பரசன் ஆண்ட்ரியா கூட்டணி:
தற்போது சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கிய நிலையில், சிறப்பாக இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவந்தது. இந்த படத்தில் சிலம்பரசனுடன் பிரியங்கா மோகன், யோகலட்சுமி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகிறார்கள். இந்த படமானது தனுஷின் வட சென்னை படத்தின் டைம் லைனில் நடக்கும் மற்றொரு கதையை மையமாக வைத்து இயக்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: நித்யா ரெட்டி-யாக சாய் பல்லவி… ஓம் படத்திலிருந்து வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ!
இந்த படத்தில் வட சென்னை படத்தில் நடித்திருந்த சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, அமீர், கிஷோர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இணைந்து தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படத்தின் முக்கியமான வீடியோ வெளியாகும் என கூறப்படுகிறது.