AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அல்லு அர்ஜூன் ராக்கா படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் இதுவா? – வைரலாகும் தகவல்!

Rashmika Mandanna In Raaka: பான் இந்திய ஸ்டார் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2 படத்திற்கு பின் ராக்கா படத்தில் நடித்துவருவதாக கூறப்பட்டது. அந்த விதத்தில் இப்படத்தில் இவர் நடித்துவரும் கதாபாத்திரம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

அல்லு அர்ஜூன் ராக்கா படத்தில் ராஷ்மிகாவின் கதாபாத்திரம் இதுவா? – வைரலாகும் தகவல்!
அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 26 Oct 2026 21:24 PM IST

கன்னட சினிமாவின் மூலம் நுழைந்து, தற்போது ஒட்டுமொத்த இந்திய அளவில் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ரணபாலி (Ranabaali). இந்த படத்தில் நடிகரும்,தனது கணவருமான விஜய் தேவரகொண்டாவுடன் (Vijay Deverakonda) அவர் இணைந்து நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் உலகமெங்கும் வெளியான நிலையில், கிட்டத்தட்ட 10 நாட்களை கடந்துள்ளது. இந்த படத்திற்கு பிறகு ராஷ்மிகா மாற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் அவரவர் படங்களில் பிசியாக இருகிறார்கள்.

இந்நிலையில் புஷ்பா 2 (Pushpa 2) படத்திற்கு பின் அல்லு அர்ஜுனின் (Allu Arjun) ராக்கா படத்தில் (Raaka Movie), ராஷ்மிகா நடிப்பதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவந்தது. இந்நிலையில் இந்த படத்தில் அவர் எப்படிப்பட்ட வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சீன் படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்… ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் நஸ்லேன்

ராக்கா படத்தில் ராஷ்மிகாவின் வேடம் எவ்வாறு இருக்கும்:

இந்த ராக்கா திரைப்படமானது சாதாரணமான படத்தை போல அல்லாமல், வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் மனிதர்களை கொண்ட ஒரு உலகமாக இப்படம் தயாரிக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கிட்டத்தட்ட 3 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முன்னணி நாயகியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். அந்த விதத்தில் நடிகை ராஷ்மிகாவும் இந்த படத்தில் நடிக்கிறாராம்.

இதையும் படிங்க: என்னப்பா இது… அஸ்மிதாவால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜேசன் மற்றும் வினோத்!

இந்த படத்தில் அவர் அல்லு அர்ஜுனுக்கு எதிரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் அட்லீ பாத்தா படத்தின் ப்ரோமோஷன் பணிகளை முடித்த நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாவுக்கான காட்சி ஷூட்டிங்கில் இணைந்துள்ளாராம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இது தொடர்பான பதிவு இணையத்தில் பரவிவருகிறது.

ராக்கா படத்தில் ராஷ்மிகாவின் வேடம் குறித்து வைரலாகும் பதிவு:

இந்த ராக்கா திரைப்படத்தில் இயக்குநர் அட்லீ இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதிமாறன் தயாரித்துவருகிறார். மேலும் இந்த பிரம்மாண்டமான படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவரும் நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு டிசம்பரில் முடியும் என கூறப்படும் நிலையில், 2027ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us