AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது ஏன்.. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம்!

Anbil Mahesh Arrest CCB Clarification : ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கி உள்ளனர். அதில், அவர்கள் கூறியிருப்பதை பார்க்கலாம்.

அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டது ஏன்.. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விளக்கம்!
அன்பில் கைதுக்கு சிசிபி விளக்கம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Oct 2026 20:46 PM IST

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்று தருவதாக ரூ. 100 கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து போலி தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் பி. டி. அரசகுமார் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், அன்பில் மகேஷ் பொய்யா மொழியே சென்னை அமைந்த கரையில் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் கைதுக்கான காரணம் குறித்து காவல்துறை விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி கோடி கணக்கில் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

ரூ.100 கோடி லஞ்ச புகாரில் 3 பேர் கைது

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளை பெற்று தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பி. டி. அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!

சென்னை- திருச்சியில் சிசிபி போலீசார் சோதனை

அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உதவியாளர்கள் வாலாடி கார்த்தி பிரகாஷ், அருண் பிரகாஷ் மற்றும் முத்துக்குமாரின் உறவினர்கள் சரவணன், கோகுலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், அவர்கள் தொடர்புடைய திருச்சி சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் தீவிர விசாரணை

இந்த சோதனையில் ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ. 100 கோடி லஞ்ச புகார்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி கைது.. இரவில் சிறையில் அடைப்பு?

Follow Us