அரசியல் காழ்ப்புணர்வோடு அன்பில் மகேஷ் கைது.. தவெக அரசுக்கு கண்டனம் – மு.க ஸ்டாலின்..
MK Stalin On Anbil Mahesh Arrest: அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் தஅன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!” எனத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 26, 2026: முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரூ.100 கோடி மோசடி புகார் தொடர்பாக அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ரூ.100 கோடி மோசடி புகார் பின்னணி என்ன?
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, சென்னையில் செயல்பட்டு வந்த போலி தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் அரசகுமார் உள்ளிட்டோர், பல்வேறு தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அரசகுமார், முத்துக்குமார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தன் மீதான நடவடிக்கைக்கு எதிராக அன்பில் மகேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கைது: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
— M.K.Stalin (@mkstalin) October 26, 2026
அன்பில் மகேஷ் கைது நடவடிக்கையைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் தஅன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்த அன்பில் மகேஷைக் கைது செய்திருப்பதன் மூலம், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்த மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப ஆளும் அரசு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read: 10 நாட்களில் 215 மி.மீ. மழை பதிவு! நாளை முதல் தமிழகத்தில் மழை குறையும் – பிரதீப் ஜான் கணிப்பு..
சட்டப்படி எதிர்கொள்வார்: ஸ்டாலின் திட்டவட்டம்!
அன்பில் மகேஷ் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார் எனக் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மூலம் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பி ஆளும் த.வெ.க. அரசு தப்பித்துக்கொள்ளலாம் என நினைப்பது ஒருபோதும் ஈடேறாது என்றும் தெரிவித்துள்ளார்.