AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

CM Vijay Inspects Chembarambakkam Lake : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் ஜோசப் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஏரியின் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் எடுத்து கூறினர்.

தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை.. செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 26 Oct 2026 17:08 PM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பலத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக முதல்வர் ஜோசப் விஜய் இன்று திங்கள்கிழமை ( அக்டோபர் 26- ஆம் தேதி) ஏரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவருக்கு செம்பரம்பாக்கம் ஏரியின் முக்கியத்துவம், ஏரியின் நீர் கொள்ளளவு, ஏரிக்கு வரும் நீர் ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து அரசுத்துறை அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி

அத்துடன் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தற்போது செம்பரம்பாக்கம் ஏரி மொத்தம் 24 அடி இருக்கும் நிலையில் தற்போது 14.76 அடி நீர் இருப்பு உள்ளது. அதாவது மொத்த ஏரியின் கொள்ளளவான 3.645 டிஎம்சி யில் தற்போது 1.488 டிஎம்சி தண்ணீர் இருப்பதற்கு உள்ளது. சென்னைக்கு மிக குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்கி வருகிறது. சென்னையில் குறிப்பாக தென் சென்னையில் ஏற்படக்கூடிய முக்கிய வெள்ளப்பெருக்கு செம்பரம்பாக்கம் ஏரி நெருங்கிய தொடர்பு உள்ளது.

மேலும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் ரூ.24 கோடி தங்கம் லஞ்சம்.. அருண் ஐபிஎஸ் அதிகாரி மீது இறுகும் பிடி.. உயர்நீதிமன்றத்தில் பகீர் மனு!

வெள்ளப்பெருக்கு ஏற்படாத வகையில் முதல்வர் ஆய்வு

எப்போதெல்லாம் செம்பரம்பாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவான 24 அடியை எட்டுகிறதோ, அப்போதெல்லாம் மிகப்பெரிய அளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2015, 2016 ஆம் ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் தான், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியை முதல்வர் விஜய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஏரியையொட்டி, சோழவரம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி, கண்ணன்கோட்டை ஏரி, கடலூர் மாவட்டத்தின் வீராணம் ஏரி ஆகியவை உள்ளது.

ஏரியின் நீர் மட்ட மாற்றம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்

குறிப்பாக, இந்த ஆண்டு தென் சென்னை பகுதியில் வெள்ளப்பெருக்கு எதுவும் ஏற்படாத வகையில் செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு கொண்டுள்ளார். இந்த ஏரியில் நீர்மட்டத்தின் அளவு மாற்றம் இருந்தால் உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார். முதல்வர் ஆய்வையொட்டி, ஏரி பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் படிக்க: ரூ. 100 கோடி லஞ்ச புகார்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடி கைது.. இரவில் சிறையில் அடைப்பு?

Follow Us