AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Suriya: டிஎஸ்பி இன்பராஜ்- ஆக சூர்யா.. சீன் படத்திலிருந்து வெளியான சூர்யாவின் கிளிம்ப்ஸ் வீடியோ!

Suriya as DSP Inbaraj In Scene: தென்னிந்திய மொழி சினிமாவில் இந்த 2026ம் ஆண்டு தீபாவளியில் வெளியாக காத்திருக்கும் சிறப்பான திரைப்படம்தான் சீன். மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா இப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த விதத்தில் இவரின் இன்பராஜ் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Suriya: டிஎஸ்பி இன்பராஜ்- ஆக சூர்யா.. சீன் படத்திலிருந்து வெளியான சூர்யாவின் கிளிம்ப்ஸ் வீடியோ!
சீன் திரைப்பட கிளிம்ப்ஸ்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 26 Oct 2026 17:25 PM IST

மலையாள சினிமாவில் ரோமசம் மற்றும் ஆவேஷம் போன்ற திரைப்படங்களை இயக்கி மக்கள் மத்தியில் சிறப்பான பிரபலத்தை பெற்ற இயக்குநர்தான் ஜித்து மாதவன் (Director Jithu Madhavan). இவரின் இயக்கத்தில் நடிகர் சூர்யா (Suriya) இணைந்த புதிய திரைப்படம்தான் சீன் (Scene Movie). இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் ஆரம்பமான நிலையில், முதலில் சூர்யா47 என அழைக்கப்பட்டுவந்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை நஸ்ரியா நஸீம் (Nazriya Nazim) இணைந்து நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பின் தமிழில் நடிக்கும் படமாக இது அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் மலையாள இளம் நடிகர் நஸ்லேன் (Naslen) மெயின் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. அந்த விதத்தில் இன்று (26/10/2026) இந்த படத்திலிருந்து சூர்யா நடித்திருக்கும் கதாபாத்திரம் தொடர்பான கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: பேக் டூ பேக் நெருப்பான கேள்விகள்… போட்டியாளர்கள் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்ட கேள்வி – வைரலாகும் ப்ரோமோ!

சீன் திரைப்படத்தில் டிஎஸ்பி இன்பராஜ்-ஆக நடிகர் சூர்யா:

இந்த சீன் திரைப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் டிஎஸ்பி இன்பராஜ் என்ற வேடத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். இந்த படத்தில் சூர்யா ஜாலியான போலீஸ் அதிகாரியை போல மற்றும் விசாரணைகளை ஈசியாக கையாளும் அதிகாரியை போல நடித்திருப்பதாக தெரிகிறது. அந்த விதத்தில் தற்போது வெளியான இந்த கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.

சூர்யாவின் சீன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகர் சூர்யாவின் இந்த சீன் திரைப்படமானது, தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாகவும், நஸ்ரியா விசாரணைக்கு உதவும் பெண்ணாகவும், நஸ்லேன் வில்லனாகவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன? சிவகார்த்திகேயன் விளக்கம்

அந்த விதத்தில் இப்படத்திற்கு யு/ஏ 16+ என்ற சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என கூறப்படுகிறது. 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு தமிழில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us