பேக் டூ பேக் நெருப்பான கேள்விகள்… போட்டியாளர்கள் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்ட கேள்வி – வைரலாகும் ப்ரோமோ!
Bigg Boss 10 Tamil: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 8வது வாரத்தில் உள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்திலே ஓபன் நாமினேஷன் மற்றும் அன் ஃபில்டர் கேள்வி போன்ற டாஸ்க் நடந்த நிலையில், அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் மாறிமாறி கேட்டுக்கொண்ட கேள்வி குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) சினிமாவை கடந்து சின்னத்திரை நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிவரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியின் சீசன் 10 தொடங்கி இன்றுடன் (26/10/2026) கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், கடந்த வாரத்தில் மட்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்துவழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியானது அவர் தொகுத்துவழங்கும் நிலையில், சுவாரஸ்யமாக இருந்தது என கூறலாம். அந்த விதத்தில் தற்போது இந்த நிகழ்ச்சியானது 8வது வாரத்தின் தொடக்கத்தில் உள்ளது. அந்த விதத்தில் இந்த வாரத்தின் முதல் நாளிலே ஓபன் நாமினேஷன் நடந்தது.
அதை தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் சக போட்டியாளர் ஒருவரை தேர்ந்தெடுத்து, எந்தவித தயக்கமும் இல்லாமல் கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்கலாம் என அன் ஃபில்டர் என்ற டாஸ்க் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பரபரப்பை ஏற்படுத்தும் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: எல்லா நேரங்களிலும் நாங்கள் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்தோம்.. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா!
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சக போட்டியாளர்களிடம் சரமாரியான கேள்வி:
இந்த டாஸ்க் தொடங்கப்பட்டதாக முதலில் வெளியான ப்ரோமோவில், முனியம்மாள் முகேஷிடம் உங்களுக்கும் சாதிகாவுக்கும் நடுவே இருக்கும் உறவு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்த ப்ரோமோ வெளியாகி வைராலகையிருந்தது. அதற்கு பிறகு தற்போது வெளியான 3வது ப்ரோமோவில், அவினாஷ், “லக்ஷ்மி பிரியாவிடம், நான் லீடராக இருக்க தகுதி இல்லை, பிக் பாஸில் இதுவரை இருந்த லீடரில் தகுதி அற்றவன் நான் என என் கூறினீர்கள்?” என கேட்டிருந்தார்.
இதையும் படிங்க: 700 கோடியை நோக்கி செல்லும் ஜெயிலர் 2 படத்தின் வசூல்? வைரலாகும் தகவல்
இதற்கு பின் அன்சர், “தன்யாவிடம் காரணமே இல்லாமல் என் மீது மாலையை போட்டு என்னை ஏன் நாமினேஷனுக்குள் இழுத்தீர்கள்?” என கேட்டார். மூன்றாவதாக ஜேசன், “டிடிஃஎப் வாசனிடம், உங்களுக்கு இந்த ஷோ வேணும்னா இருங்க, வேண்டாம் என்ற போயிருங்க. ஆனால் நீங்கள் இருந்தால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கும் என் ஏன் நினைக்கிறீங்க?” என கேள்வியை எழுப்பியிருந்தார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 50வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day50 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/XNpvh1SblG
— Vijay Television (@vijaytelevision) October 26, 2026
இந்த நிகழ்ச்சியின் 8வது வாரத்தின் தொடக்கமே ஓபன் நாமினேஷன் மற்றும் அன் ஃபில்டர் கேள்வி என விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. கடந்தவாரம் சர்வைவல் டாஸ்க் இருந்த நிலையில், இந்த வாரத்திலும் அதுபோல வேறு எதாவது டாஸ்க் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக போட்டியாளர் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.