பிக்பாஸில் இந்த வாரம் 15 பேரும் நாமினேஷனில் உள்ளனர்… யார் வெளியேற வாய்ப்பு?
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 7 வாரங்கள் முடிவடைந்து 8-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் வீட்டில் உள்ள 15 போட்டியாளர்களும் நாமினேசனில் இடம் பிடித்து உள்ளனர்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து 7 வாரங்கள் முடிவடைந்து தற்போது 8-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழில் தொடங்கும் போதே ஒரு டேக் லைன் வைக்கப்பட்டது பிக்பாஸ் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று. அந்த விசயம் நேற்றைய எபிசோடிலும் நடைப்பெற்றது. நேற்று ஞாயிற்று கிழமை பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 7-வது வாரத்திற்கான எவிக்சன் நடைப்பெற்றது. இதில் எவிக்சன் ஃப்ரீ பாஸ் வைத்து இருந்த மூன்று நபர்களில் ஜேசன் மற்றும் வாசன் முன்பே சேவ் செய்யப்பட்டனர். மூன்றாவதாக இருந்த ஷாமா டேஞ்சர் சோனில் இருந்தார். அவருடன் இன்னும் 4 போட்டியாளர்களும் டேஞ்சர் சோனில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த ரம்யா கிருஷ்ணன் அந்த எவிக்சன் ஃப்ரீ பாஸை பயன்படுத்துகிறீர்களா என்று ஷாமாவிடம் கேட்டார்.
ஆனால் ஷாமா ஓவர் கான்ஃபிடன்ஸில் அதனை தற்போது பயன்படுத்தவில்லை என்று கூறிவிட்டார். இதில் என்ன ட்விஸ்ட் என்றால் நேற்றைய எவிக்ஷனில் குறைவான வாக்குகளைப் பெற்று இருந்த காரணத்தால் ஷாமா எவிக்ட் செய்யப்பட்ட பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது வீட்டில் உள்ள போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸில் இந்த வாரம் 15 பேரும் நாமினேஷனில் உள்ளனர்:
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் 50-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகின்றது. அதில் வீட்டில் உள்ள 15 போட்டியாளர்களும் அந்த நாமினேஷனில் இடம் பிடித்துள்ளனர். இதில் யார் இந்த வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தர்மன் படத்தை எப்போது வெளியிட படக்குழு திட்டம்? வைரலாகும் தகவல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day50 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/gC2eA1YBWT
— Vijay Television (@vijaytelevision) October 26, 2026
Also Read… எனது மகனின் திரை வாழ்க்கைக்கு நான் ஆதரவளிக்காமல் தவறவிட்டேன் – தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்!