டெக்ஸ்லா படத்தில் பிரபல பாலிவுட் நடிகரை நடிக்க வைக்க நினைக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – வைரலாகும் தகவல்
Director Aishwarya Rajinikanth | இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் டெக்ஸ்லா. இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளாக அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்ய ரஜினிகாந்த் (Aishwarya Rajinikanth). இவர் தமிழ் சினிமாவில் வெளியான 3 என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆகி இருந்தார். அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் முன்னாள் கணவர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது தான் குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது அடுத்தடுத்து வெளியான படங்களும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமாவில் எழுதி இயக்கி வரும் படம் டெக்ஸ்லா. இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெய் மற்றும் சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




டெக்ஸ்லா படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்?
ஜெய் நடிப்பில், கண்ணன் ரவி குழுமத் தயாரிப்பில் உருவாகும் தனது வரவிருக்கும் படமான ‘டெக்ஸ்லா’வில், பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரும்பினார். தகவல்களின்படி, படத்தின் ஒப்பீட்டளவில் சிறிய அளவு மற்றும் அமிதாப்பின் சம்பளம் குறித்த கவலைகள் காரணமாக, இந்த யோசனை ஆரம்பத்தில் ஜெய் மற்றும் தயாரிப்பாளருக்கு ஆச்சரியத்தை அளித்தது.
Also Read… டோரதி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்… வெளியானது அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Amitabh Bachchan IN #TEXLA?
Director #AishwaryaRajinikanth wanted Bollywood icon #AmitabhBachchan to play a key role in her upcoming film #Texla, starring #Jai and produced by Kannan Ravi Groups.
According to reports, the proposal initially surprised Jai and the producer, given the film’s relatively modest scale and concerns over Amitabh’s remuneration.
The report further claims that Aishwarya approached Amitabh through her father, Superstar #Rajinikanth, and personally narrated the film and his character. Amitabh reportedly agreed to consider the role out of respect for Rajinikanth’s family.
The reported conditions include shooting his portions entirely in Mumbai and scheduling them according to his availability😲. With around 15 days of work said to be required, the team is waiting for his dates🫣.
Will Amitabh Bachchan’s reported inclusion bring a major surprise to #Texla? 🔥
Follow 👉 @FilmyBowlTamil
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) October 20, 2026
Also Read… ராமாயணா படத்தில் பாடல் பாடியது… அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!