AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ராமாயணா படத்தில் பாடல் பாடியது… அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

Anirudh X Post | பான் இந்திய மொழிகளில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இவர் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ராமாயணா படத்திற்காக பாடியது குறித்து எமோஷ்னலான பதிவை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ராமாயணா படத்தில் பாடல் பாடியது… அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
ராமாயணாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Oct 2026 19:17 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத் ரவிச்சந்தர். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் உச்ச நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும் பல நடிகர்கள் இவரின் கால் ஷீட்டிற்காக காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் படங்கள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருவது போல சமீப காலமாக அவரது திருமணம் தொடர்பான செய்திகளும் வெளியாகி தொடர்ந்து வைரலாகி வருகின்றது. மேலும் இந்த 2026-ம் ஆண்டில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில் அவர் மற்ற இசையமைப்பாளரின் இசையிலும் பாடல்களைப் பாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் ஒரு பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்தப் பாடல் பாடியது குறித்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு:

அந்தப் பதிவில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் பேசியதாவது, ராமாயணம் படைப்பில், எனது அன்பிற்குரிய ஏ.ஆர். ரஹ்மான் அவர்களுக்காக, எனது சகோதரர் ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை (ராவண தாண்டவம்) பாடியதில் நான் மிகுந்த நன்றியுணர்வுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர் தமிழ் வெர்ஷனில் பாடிய பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… Dorothy : டோரதி படத்தின் 25வது நாள்.. இன்ட்ரவல் சண்டை மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்!

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அவன் தூக்குனா நானும் தூக்குவேன்.. சாப்பாட்டுக்காக டிடிஃஎப் வாசனுடன் மோத நினைக்கும் லக்ஷ்மி பிரியா!

Follow Us