AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ramayana Part 1: ரா ரா ரா ராவணா… ராமாயணா படத்திலிருந்து வெளியான ‘ராவண தாண்டவம்’ பாடல்!

Ravana Tandavam Song: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யாஷ். இவர் பாலிவுட்டில் உருவாகியுள்ள ராமாயணா பார்ட் 1 படத்தில் ராவணனாக நடித்துள்ளார். அந்த விதத்தில் தற்போது இப்படத்திலிருந்து ராவண தாண்டவம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் சிறப்பாக வைரலாகிவருகிறது.

Ramayana Part 1: ரா ரா ரா ராவணா… ராமாயணா படத்திலிருந்து வெளியான ‘ராவண தாண்டவம்’ பாடல்!
ராவண தாண்டவம் பாடல்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 21 Oct 2026 11:02 AM IST

ஒட்டுமொத்த பான் இந்திய சினிமா ரசிகர்களும் இந்த 2026ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கும் திரைப்படம்தான் ராமாயணா : பார்ட் 1 (Ramayana: Part 1). இந்த திரைப்படத்தை இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்க, தயாரிப்பாளராகவும், உடன் எழுத்தாளராகவும் நமித் மல்ஹோத்ரா பணியாற்றியுள்ளார். இந்த படமானது இந்திய மொழிகளை கடந்து, ஆங்கில மொழியிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே தொடங்கியிருந்தது. இப்படத்தில் ரன்பீர் கபூர் (Ranbir Kapoor), யாஷ் (Yash), சாய் பல்லவி (Sai Pallavi), ரவி துபே, காஜல் அகர்வால், மற்றும் ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் மற்றும் நடிகர் யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளானது வெகு தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகிவருகிறது. அந்த விதத்தில், ராமாயணா பார்ட் 1 படத்திலிருந்து “ராவண தாண்டவம்” (Ravana Tandavam) என்ற தமிழ் பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: ரெட் டீம் கேப்டன்சி பிடிக்கல… பிக் பாஸில் ஜேசனால் வெடித்த கலவரம்.. கோபத்தில் அவினாஷ் மற்றும் டிடிஃஎப் வாசன்!

ராவண தாண்டவம் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பாடலை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள நிலையில், தமிழில் வெளியான ராவண தாண்டவம் பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்து பாடியுள்ளனர். முதல் முறையாக மற்றும் யாரும் எதிர்பார்க்காத காம்போவாக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலில் ராவணனாக யாஷின் தாண்டவம் குறித்த வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராமாயணா படத்தின் விஎஃப்எக்ஸ்.. ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த யாஷ்!

ராமாயணா திரைப்படத்தின் தமிழ் ப்ரோமோஷன் நிகழ்ச்சி;

ராமாயணா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளானது மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்தி மற்றும் தெலுங்கானாவில் இந்த படத்தின் ப்ரமோஷன் நடைபெற்றுவந்த நிலையில், தமிழில் மிகவும் விரைவில் நடைபெறவுள்ளதாம். இதில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை படக்குழு பகிரும் என கூறப்பட்டுள்ளது.

Follow Us