ரெட் டீம் கேப்டன்சி பிடிக்கல… பிக் பாஸில் ஜேசனால் வெடித்த கலவரம்.. கோபத்தில் அவினாஷ் மற்றும் டிடிஃஎப் வாசன்!
Jason And Avinash Fight: தமிழில் இந்த பிக் பாஸ் 10 நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் சர்வைவல் டாஸ்க் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இதில் ரெட் அணியில் இருந்த ஜேசன் அணி மாறிய நிலையில், அது அவினாஷ் மற்றும் டிடிஃஎப் வாசன் மீது பயங்கர கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் கொண்டாடவும் சிறப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியானது தொடங்கி தற்போது 7வது வாரத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்துவரும் நிலையில், சிறப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது பல்வேறு டாஸ்குகள் மற்றும் வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களுடன் தீவிரமாகவே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 7வது வார தொடக்கமே சர்வைவல் டாஸ்க்குடன் (Survival Team Task) தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. போட்டியாளர்கள் ரெட் டீம் மற்றும் பில் டீம் என இரு அணிகளாக பிரிக்கப்பட்ட நிலையில், ரெட் டீமின் கேப்டனாக அவினாஷ் இருக்கிறார். அந்த விதத்தில் இந்த அணியில் அவரின் கேப்டன்ஷிப் பிடிக்காத காரணத்தால் ஜேசன் அணி மாறிய நிலையில், இது ரெட் அணியினரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விதத்தில் கேப்டன்ஷிப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால ப்ளூ அணி மாறியதாக ஜேசன் கூறிய நிலையில், இது அவினாஷ் மற்றும் டிடிஃஎப் வாசன் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று (21/10/2026) 45வது நாளில் வெளியான முதல் ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: சந்தானத்தின் 20வது திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
கட்சி மாறிய ஜேசனால் கோபத்தின் உச்சத்தில் ரெட் டீம்:
இந்த ப்ரோமோவில், ரெட் டீம் கேப்டன் ஷிப் மீட்டது தனக்கு நம்பிக்கை இல்லை என ஜேசன் கூறியது, டிடிஃஎப் வாசன் இதை முதலிலே கூறியிருக்கலாம் என கேட்கிறாரே. அதற்கு ஜேசன், முதலில் நன்றாக இருந்தது இப்பொது நன்றாக இல்லை என அவர் கூறியிருந்தார். இதனால் கோபமடைந்த அவினாஷ், ஜேசனிடம் சண்டைக்கு செல்வதுபோல பேசுகிறார். ஜேசன் உடனே வெளியே வா பார்த்துக்கொள்ளலாம் என அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: யாரும் ராவணனாக நடிக்க விரும்புவதில்லை.. யாஷ் குறித்து பாராட்டி பேசிய சாய் பல்லவி!
இதனால் கோபமடைந்த அவினாஷ், என்ன வெளியே வா வெளியே வானு, இப்போவே வெளியே வாறன் என்ன பண்ணுவ நீ என அவரிடம் ஆத்திரமாக கேள்விகளை கேட்டிருந்தார். மேலும் அவினாஷை ரெட் டீம் அணியினர் தடுத்து நிற்பதுபோல இந்த ப்ரோமோவில் உள்ளது. ஜேசன் கட்சி மாறிய காரணமானது தற்போது ரெட் டீம் மீது அதீத கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 45வது நாளின் முதல் ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day45 #Promo1 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/235EycXRdv
— Vijay Television (@vijaytelevision) October 21, 2026
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போர்த்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகிறது. சர்வைவல் டாஸ்க் நடைபெற்றுவரும் நிலையில், ரெட் டேம் மற்றும் ப்ளூ டீம் இடையே மோதல்கள் வலுக்கிறது. இந்த வாரத்தின் இறுதியில் இந்தத் அணி வெற்றிபெறும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.