என்னடா பிரச்சன உங்களுக்கு… பிக் பாஸில் முனியம்மாளை வம்புக்கு இழுக்கும் ப்ளூ டீம்!
Bigg Boss Tamil 10 Promo: தமிழில் மக்கள் மத்தியில் அதிகம் விரும்பப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியில் சர்வைவல் டாஸ்க் நடந்துவரும் நிலையில், அதில் கிச்சன் டீமில் இருக்கும் முனியம்மாளிடம் ப்ளூ டீம் போட்டியாளர்கள் வம்புக்கு இழுக்கும் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தமிழில் சிறப்பாக வெளியாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பமாகி இன்றுடன் (20/10/2026) கிட்டத்தட்ட 44 நாட்களாகியுள்ளது. இந்த வாரத்தின் தொடக்கமே சண்டையில்தான் ஆரம்பமானது என கூறலாம். பிக் பாஸில் தற்போது சர்வைவல் டாஸ்க் நடந்துவரும் நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் ரெட் டி மற்றும் ப்ளூ டீம் என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த விதத்தில் இந்த வீட்டின் பவரை ப்ளூ டீம் கைப்பற்றிய நிலையில், ரெட் டீம் போட்டியாளர்களை வம்புக்கு இழுபத்தை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த விதத்தில் இன்று (20/10/2026) வெளியான 3வது ப்ரோமோவில் முனியம்மாள் கிச்சன் அணியில் இருக்கும் நிலையில், அவரை வெறுப்பேத்தும் விதத்தில் ப்ளூ டீம் அணியினர் பேசி வருகிறார்கள் இது குறித்த ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: யாரும் ராவணனாக நடிக்க விரும்புவதில்லை.. யாஷ் குறித்து பாராட்டி பேசிய சாய் பல்லவி!
பிக் பாஸில் முனியம்மாளை வம்புக்கு இழுக்கும் ப்ளூ டீம்:
தற்போது வெளியான ப்ரோமோவில், முனியம்மாளிடம் அன்சர் பாதி கடித்த கேரட் ஒன்றை தொக்கி கையில் போடுகிறார். இதை முனியம்மாள் பிடிக்காத நிலையில், கீழே விழுந்தது. உடனே ப்ளூ டீமில் இருக்கும் சாதிகா, முனியம்மாள் இவ்வாறு உணவை வேஸ்ட் பண்ணுகிறார் என கூறிய நிலையில், அவரிடம் வாக்குவாதத்திற்கும் செல்கிறார். மேலு தேர் டீம் போட்டியாளர்களை தொடர்ந்து உளு டீம் போட்டியாளர்கள் சீண்டிவரும் நிலையில், தற்போது வெளியான ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: அவினாஷ் மீதுள்ள கோபம்.. ப்ளூ டீமுடன் இணைய நினைக்கும் ஜேசன் – என்ன நடக்குது பிக் பாஸில்..!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 44வது நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day44 #Promo3 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/xShpyF8fvG
— Vijay Television (@vijaytelevision) October 20, 2026
தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது சர்வைவல் டாஸ்க்குடன் விறுவிறுப்பாக இருந்துவருகிறது. தொடர்ந்து ப்ளூ டீம் டாஸ்குகளில் வென்றுவரும் நிலையில், ரெட் டீமை அவர்கள் காமெடி செய்யும் விதத்தில் ப்ரோமோ வெளியாகிவருகிறது. மேலும் ரெட் டீம் போட்டியாளர்கள் தொடர்ந்து முன்னேற்த்தி வருகிறார்கள். ஆனால் ப்ளூ டீமில் உள்ள போட்டியாளர்கள் அவர்களை கோபப்படுத்தும் விதத்தில் பல்வேறு விஷயங்களை செய்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.