Raaka: அது அட்லீயின் உலகம்… ராக்கா திரைப்படம் குறித்து சூப்பரான அப்டேட் கொடுத்த இயக்குநர் அனல் அரசு!
Director Anal Arasu About Raaka: தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் அட்லீ. இவரின் இயக்கத்தில் ராக்கா படமான பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இப்படம் குறித்து இயக்குநர் அனல் அரசு சுவாரஸ்யமான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவின் மூலம் இயக்குநராக நுழைந்து, தற்போது இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் மிக பிரம்மாண்ட இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் அட்லீ (Director Atlee). இவர் இறுதியாக ஷாருக்கானின் ஜவான் (Jawan) திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தி மொழியில் வெளியாகியிருந்த இப்படமானது இவருக்கு மாபெரும் வெற்றியை கொடுத்திருந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் தற்போது இயக்கிவரும் புதிய திரைப்படம்தான் ராக்கா (Raaka). இந்த படத்தில் தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜுன் (Allu Arjun) ஹீரோவாக நடிக்க, அவருடன் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone) நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களும் இணைந்து நடித்துவருகிறார்களாம்.
இந்த படத்தின்ஸ் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2027ம் ஆண்டில் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தில் முக்கியமான பணியை இயக்குநர் அனல் அரசு செய்துள்ளார். அந்த விதத்தில் இப்படமானது எவ்வாறு இருக்கும் என்பது குறித்த சுவாரஸ்ய தகவலை அவர் கூறியுள்ளார்.




இதையும் படிங்க: பொங்கலுக்கு இல்லையா? ரஜினிகாந்தின் தர்மன் பட ரிலீஸ் குறித்து வைரலாகும் தகவல்!
அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனின் ராக்கா படம் குறித்து சுவாரஸ்ய தகவலை சொன்ன இயக்குநர் அனல் அரசு:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் அனல் அரசு, “இது ஒரு வேறான உலகம். இந்த முழு உலகமும் அட்லீயின் படைப்பு. இதில் வித்தியாசமான மனிதர்கள் இருப்பார்கள். இது எங்களுக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருந்தது, ஏனென்றால் இதில் வரும் கதாபாத்திரங்கள் நாங்கள் இதுவரை பார்த்திராதவை.
இதையும் படிங்க: சர்வைவல் டாஸ்க் டே 1… ரெட் டீம் மற்றும் ப்ளூ டீம் இடையே பிரிவினை!
இந்தப் புதிய கதாபாத்திரங்களின் சக்திகளையும் நடத்தைகளையும் நாங்கள் வரையறுக்க வேண்டியிருந்தது, அதனால் இது போன்ற ஒரு படத்தை இயக்குவது மிகவும் சவாலாக இருந்தது. நான் இதற்கு முன்பு இது போன்ற ஒரு படத்தில் பணியாற்றியிருந்ததில்லை என்பதால், படப்பிடிப்பிற்கு முன்பு நாங்கள் நிறைய விவாதித்தோம்” என அதில் அவர் கூறியுள்ளார்.
ராக்கா திரைப்படம் குறித்து இயக்குநர் அனல் அரசு கூறியதாக வைரலாகும் பதிவு:
Action Director #AnlArasu about #RAAKA :
“It’s another world.. The entire world itself is a creation of #Atlee..🔥 It’ll have different people.. It was completely new experience for us, as the characters will be unlike anything we’ve ever seen before..💥
We need to define the powers and behaviours of these new characters, so executing a film like this was very challenging..🤝 We had a lot of discussions before the shoot, as I’ve never done a film like this before..”🔥
— Laxmi Kanth (@iammoviebuff007) October 19, 2026
ராக்கா திரைப்படமானது மக்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் நிலையில், மிக பிரம்மாண்டமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவருகிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது 2027ம் ஆண்டின் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.