Varanasi: வாரணாசி பட ஷூட்டிங் 80 சதவீதம் ஓவர் – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கொடுத்த அப்டேட்!
SS Rajamouli Varanasi Film : பான் இந்திய பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இவரின் இயக்கத்திலும், நடிகர் மகேஷ் பாபுவின் நடிப்பிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் வாரணாசி. இப்படத்தின் ஷூட்டிங் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அப்டேட் கொடுத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து உலகத்தரம்வாய்ந்த திரைப்படங்களை கொடுத்துவருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி (SS.Rajamouli). இவரின் இயக்கத்தில் நான் ஈ (Naan E) முதல் பாகுபலி போன்ற பல பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் இயக்கத்தில் தென்னிந்திய சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (RRR). இந்த படத்தில் ராம் சரண் மாற்று ஜூனியர் என்டிஆர் இருவருமே இணைந்து நடித்திருந்த. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜமௌலி இயக்கிவரும் மிக பிரம்மாண்டமான திரைப்படம்தான் வாரணாசி (Varanasi). இதில் தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபு (Mahesh babu) லீட் நாயகனாக நடிக்க, அவருடன் பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra) மற்றும் மலையாள ஹீரோ பிருத்வி ராஜ் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது அதிரடி ஆக்ஷன் மற்றும் அறிவியல் புனைகதைகளுடன் உருவாக்கப்பட்டுவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகிவருகிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய எஸ்.எஸ்.ராஜமௌலி, வாரணாசி பட ஷூட்டிங் குறித்து அப்டேட் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: இந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சஞ்சய் ராமசாமியைப் பார்ப்பீங்க – விஸ்வநாத் & சன்ஸ் பட தயாரிப்பாளர்
வாரணாசி படத்தின் ஷூட்டிங் குறித்து பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி:
அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, அதில் “நாங்கள் வாரணாசி படத்தின் கிட்டத்தட்ட 80% ஷூட்டிங்கை முடித்துவிட்டோம். மிக முக்கியமான சண்டைக் காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 20% படப்பிடிப்பில், சிறிய ஆனால் சமமான முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களை ஒன்றிணைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. எங்கள் பணி ஓட்டம் ஒருபோதும் நிற்பதில்லை.
இதையும் படிங்க: திருமணம் வரை மட்டுமல்லாமல்… காதல் நிலையானதாக இருக்க வேண்டும் – நடிகர் சூர்யா
படப்பிடிப்பு தொடரும்போதே, படத்தொகுப்பும் ஒரே நேரத்தில் நடைபெறுகிறது. மேலும், முடிக்கப்பட்ட காட்சிகள் உடனடியாக வி.எஃப்.எக்ஸ் (VFX) குழுவிற்கு அனுப்பப்படுகின்றன. தயாரிப்பு மற்றும் பிந்தைய தயாரிப்புப் பணிகள் கைகோர்த்துச் செல்கின்றன. இது, ஒவ்வொரு கட்டத்திலும் படத்தை வடிவமைக்க எங்களுக்கு உதவுகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
வாரணாசி திரைப்படம் குறித்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
THANK YOU EVERYONE for all the love, accolades and applause for the #Varanasi Announcement Video. Our whole @VaranasiMovie team is grateful to all of you. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 pic.twitter.com/IkjWle0gm5
— rajamouli ss (@ssrajamouli) November 16, 2025
இந்த வரானாசி படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகியுள்ள நிலையில், மக்கள் மத்தகியில் எதிர்பார்ப்பை அதிகரித்துவருகிறது. இப்படமானது வரும் 2027ம் ஆண்டு ஏப்ரல் 07ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாம். இந்த படமானது தமிழ், தெலுங்கு, இந்தி , மலையாளம் என பான் இந்திய மொழிகளில் உருவிக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.