இந்தப் படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சஞ்சய் ராமசாமியைப் பார்ப்பீங்க – விஸ்வநாத் & சன்ஸ் பட தயாரிப்பாளர்
Producer Naga Vamsi talks about Suriya character in Vishwanath & Sons movie | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து தயாரிப்பாளர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய மொழிகளில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ளது சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ். தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகன்களின் படங்களை தயாரித்து உள்ள இந்த நிறுவனம் தற்போது தமிழ் மொழிப் படங்களையும் தயாரித்து வருகின்றனர். முன்னதாக இந்த தயாரிப்பு நிறுவனம் தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஜெர்சி, பீம்லா நாயக், தில்லு சதுக்கம் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகியப் படங்களை தயாரித்து உள்ளனர். இந்தப் படங்கள் தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி இருந்தார்.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று கோயம்புத்தூரில் நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் நாக் வம்சி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




பல ஆண்டுகளுக்குப் பிறகு சஞ்சய் ராமசாமியைப் பார்ப்பீங்க:
அதன்படி தயாரிப்பாளர் நாக் வம்சி பேசியதாவது, இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சஞ்சய் ராமசாமி போன்றதொரு கதாபாத்திரத்தை சூர்யா சாருடைய ரசிகர்களுக்கு வழங்குவோம் என்பது எனது வாக்குறுதி. இதை நான் ஆணவத்தில் சொல்வதாக நினைக்க வேண்டாம். இந்தப் படம் தமிழின் ‘அலா வைகுந்தபுரமுலோ’ (Ala Vaikunthapurramuloo) படத்தைப் போன்றதொரு மிகப்பெரிய வெற்றியாக அமையும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Ravi Mohan: என் முழு மனதுடன்… நடனமாடிய வீடியோவை வெளியிட்ட ரவி மோகன்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VishwanathAndSons Audio Launch :
Producer #NagaVamsi:
“It’s my promise to the #Suriya sir fans, that we will be giving SanjayRamasamy after a long time via Vishwanath And Sons. Don’t think I’m arogant, I’m so confident that this film will be Ala Vaikunthapurramuloo from Tamil… pic.twitter.com/czfbEgiV5l
— FilmyBowl Tamil (@FilmyBowlTamil) August 2, 2026
Also Read… Jason Sanjay: அந்த ஆக்ஷன் திரைப்படம் எனக்கு உண்மையிலே பிடிக்கும் – ஜேசன் சஞ்சய்!