AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mamitha Baiju: ஒருவாட்டி சான்ஸ் மிஸ் ஆகிட்டு.. சூர்யாவுடன் நடித்தது குறித்து பகிர்ந்த மமிதா பைஜூ!

Mamitha Baiju Speech: தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் மமிதா பைஜூ. இன்று (02/08/2026) விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட இசைவெளியீட்டு விழா நடைபெற்றிருந்த நிலையில், அதில் சூர்யாவுடன் நடித்தது குறித்து பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Mamitha Baiju: ஒருவாட்டி சான்ஸ் மிஸ் ஆகிட்டு.. சூர்யாவுடன் நடித்தது குறித்து பகிர்ந்த மமிதா பைஜூ!
சூர்யா மற்றும் மமிதா பைஜூ Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Aug 2026 21:20 PM IST

மலையாளம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்துவருபவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜன நாயகன் (Jana Nayagan). தமிழக முதல்வர் விஜய்யின் (CM Vijay) நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஜன நாயகன். இந்த படத்தில் நடிகை மமிதா பைஜூ, அவரின் மகளாக நடித்து அசத்தியிருந்தார். பெண்ணியம் மற்றும் அரசியல் சார்ந்த கதைக்களத்தில் வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் மமிதாவின் நடிப்பில் வெளியாகும் படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and Sons).

இப்படத்தில் சூர்யா (Suriya) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (02/08/2026) கோவையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய மமிதா பைஜூ, சூர்யாவுடன் நடித்த அனுபவம் குறித்து நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த கௌதம் வாசுதேவ் மேனன்

விஷ்வநாத் அண்ட் சன்ஸ் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பற்றி பேசிய மமிதா பைஜூ:

அந்த நிகழ்ச்சியின் மேடையில் பேசிய மமிதா பைஜூ, “ஒருவாட்டி சான்ஸ் மிஸ் ஆகிடுச்சு, இந்த முறை கடவுள் மீண்டும் வாய்ப்பை கொடுத்துட்டாரு. முதலில் உங்களுடன் நடித்ததை பற்றி சொல்லவேண்டும் என்ற மிகவும் உற்சாகமாக இருந்தது. உங்களிடம் இருந்து நிறைய புரிந்துகொண்டு, நிறைய கற்றுக்கொண்டேன். உங்களின் ஒழுக்கம், ஒரு காட்சியில் எப்படி நடிக்கவேண்டும் என்ற ஒரு அணுகுமுறை.

இதையும் படிங்க: உங்களுக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்? செய்தியாளரை சாடிய அனுபமா பரமேஸ்வரன்!

கேமராவின் பின் அவரின் அணுகுமுறை. நீங்கள் எனக்கு ஒரு உத்வேகமானவர் மற்றும் அனைவருக்கும் ஒரு முன்னோடியும் கூட. நல்ல ஜெண்டில்மேன் மற்றும் சக நடிகர் நீங்கள்” என அதில் அவர் நெகிழ்ச்சியாக பேசினார். மேலும் அந்த மேடையில் இயக்குனர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் போன்றவர்களை பற்றி பேசியிருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா குறித்து நடிகை மமிதா பிஞ்சு பேசியது தொடர்பாக படக்குழு வெளியிட்ட எக்ஸ் வீடியோ பதிவு:

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது சிறப்பான பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் குழு யு/ஏ தர சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கருப்பு படத்திற்கு பின் சூர்யாவுக்கு வெற்றி திரைப்படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us