AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரத்தத்த தா.. டிமாண்டி காலனி 3 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட் இதோ!

Demonte Colony 3 First Single: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடித்துள்ள திரைப்படம்தான் டிமாண்டி காலனி 3. இப்படமானது கடந்த 2024ம் ஆண்டு வெளியான டிமாண்டி காலனி 2 பட தொடர்ச்சியான கதையில் உருவாகிவருகிறது. இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரத்தத்த தா.. டிமாண்டி காலனி 3 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? – வெளியான அப்டேட் இதோ!
டிமாண்டி காலனி 3 முதல் பாடல் அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Aug 2026 19:16 PM IST

தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் திரைப்படம்தான் டிமாண்டி காலனி 3 (Demonte Colony 3). இந்த படத்தை தமிழ் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்க (R. Ajay Gnanamuthu), அருள்நிதி (Arulnithi) லீட் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படமானது கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டிமாண்டி காலனி 1, 2024ம் ஆண்டில் வெளியான டிமாண்டி காலனி 2 போன்ற திரைப்படங்களில் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாகிவரும் படம்தான் டிமாண்டி காலனி 3. இந்த படமானது சிறப்பாக ஹாரர் கதைக்களத்தில் உருவபாக, அதில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, அவருடன் பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar), அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது முழுக்க ஹாரர் மற்றும் ஆக்ஷன் கதைகளில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இதற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: என் முழு மனதுடன்… நடனமாடிய வீடியோவை வெளியிட்ட ரவி மோகன்!

டிமாண்டி காலனி 3 பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?

டிமாண்டி காலனி 3 படத்தின் இசையமைப்பாளராக சாம் சி எஸ் பணியாற்றிவரும் நிலையில், பின்னணி இசை மற்றும் பாடல்கள் உருவாகியுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” என்ற பாடல் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதியில், மாலை 5:01 மணியளவில் வெளியாகவுள்ளதாம். தற்போது அந்த அப்டேட்டை படக்குழு வெளியிட்ட நிலையில், இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ரியோவின் சூப்பர்ஹிட் பட இயக்குநருடன் இணையும் நடிகர் ஜீவா? வைரலாகும் தகவல்

டிமாண்டி காலனி 3 படத்தின் முதல் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட அப்டேட் பதிவு:

டிமாண்டி காலனி 3 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:

அருள்நிதி மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ள டிமாண்டி காலனி 3 படத்திற்கு சென்சார் ஏற்கனவே கிடைத்துள்ளது. இப்படத்திற்கு சென்சார் குழு ஏ தர சான்றிதழ் கொடுத்துள்ளது. இந்த படத்தை 18 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் மட்டுமே பார்க்கமுடியும். இப்படத்தில் அதிக வன்முறை, ரத்த காட்சிகள் போன்றவை இருக்கும் நிலையில், அதனால 18 வயதிற்கும் மேற்பட்ட நபர்கள் மட்டுமே பார்க்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us