ஒவ்வொரு ரகசியத்தையும் ஒருத்தர் பாதுகாக்கிறார்… வெளியானது டிமாண்டி காலனி 3 படத்தின் ப்ரோமோ வீடியோ
Demonte Colony 3 Movie Librarian Introduction Video Out Now: தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் டிமாண்டி காலனி. இந்தப் படத்தின் இரண்டு பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து தற்போது மூன்றாவது பாகம் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி தொடர்ந்து பான் இந்திய சினிமாவில் வெளியாகும் பேய் படங்கள் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகின்றது. குறிப்பாக சில ஹாரர் படங்கள் பேய் மட்டும் இன்றி காமெடியை மையமாக வைத்து வெளியாகி பேய் படத்தையே காமெடிப் படமாக மாற்றி விடுகின்றனர். முன்பு எல்லாம் ஹாரர் படம் என்றால் அதனைப் பார்க்க மக்கள் பயப்படுவார்கள். ஆனால் தற்போது பான் இந்திய மொழிகளில் வெளியாகும் ஹாரர் படங்கள் காமெடியை மையமாக வைத்து வெளியாவதால் பேயைப் பார்த்து மக்கள் சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் முழுக்க முழுக்க ஹாரரை மையமா வைத்து படங்கள் வெளியாகி மக்களிடையே பயத்தை ஏற்படுத்தும் படங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.
அந்த வகையில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியானது டிமாண்டி காலனி. இந்தப் படம் சூப்பர் நேச்சுரல் ஹாரர் த்ரில்லர் படமாக வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் பேச்சுளர் அறையில் ஏற்படும் பல திகில் சம்பவங்களை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ரசிகர்கலீடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இருக்கும் முக்கிய கதாப்பாத்திரம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.




வெளியானது டிமாண்டி காலனி 3 படத்தின் ப்ரோமோ வீடியோ:
இந்த டிமாண்டி காலனி படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது பாகம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இந்த படத்தில் உள்ள முக்கிய கதாபபத்திரமான லைப்ரேரியன் யார் என்பது குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை சோபனா?
டிமாண்டி காலனி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Every secret has a keeper
Every page has a price 📜Meet the mind behind the madness.@gurusoms as the Librarian 😈#DemonteColony3 @arulnithitamil @AjayGnanamuthu @Sudhans2017 @PassionStudios_ @DangalTV @RDCMediaPvtLtd@SamCSmusic @sivakvijayan @priya_Bshankar… pic.twitter.com/2PiO6o4Ymd
— Passion Studios (@PassionStudios_) March 17, 2026