AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆத்தாடி மனசுதான் ரெக்க கட்டி பறக்குது… 14 ஆண்டுகளைக் கடந்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற கழுகு படம்!

14 Years Of Kachugu Movie starring Krishna and Bindu Madhavi: நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் கழுகு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

ஆத்தாடி மனசுதான் ரெக்க கட்டி பறக்குது… 14 ஆண்டுகளைக் கடந்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற கழுகு படம்!
கழுகு படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Mar 2026 12:27 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் கழுகு. இந்தப் படத்தினை இயக்குநர் சத்யசிவா எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் கிருஷ்ணா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நாயகியாக நடிகை பிந்து மாதவி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர் கருணாஸ், தம்பி ராமையா, ஜெயபிரகாஷ், நெல்லை சிவா, ஹல்வா வாசு, நிதிஷ் வீரா, பிரவீன் ஜி. வடிவேலு, சுஜிபாலா, உமாஸ்ரீ, விஸ்வேஸ்வர ராவ், சம்பத் ராம் ஆகியோருடன் இணைந்து நடிகர்கள் ஆர்த்தி, ஆர்யா, திவ்யதர்ஷினி, கணேஷ்கர், ஜெனிபர், ஜீவா, கலா, கீர்த்தி, லிங்குசுவாமி, ஓவியா, பாண்டிராஜ், பேரரசு, பிரேம்ஜி அமரன், பிரியா ஆனந்த், புஷ்பவனம் குப்புசாமி, ராதிகா, எஸ்.ஜே. சூர்யா, சஞ்சீவ், சிவகார்த்திகேயன், தமன், வெங்கட் பிரபு, விஜயலட்சுமி , விஷ்ணுவர்தன் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

14 ஆண்டுகளைக் கடந்தது கழுகு படம்:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விழுந்து தற்கொலை செய்துகொள்வர்கள் மற்றும் எதிர்பாராதவிதமாக விழுந்து உயிரிழப்பவர்களின் உடல்களைக் கைப்பற்றி மலைக்கு மேலே கொண்டுவரும் வேலையை செய்துவருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நாயகி பிந்து மாதவியின் தங்கை காதல் காரணமாக தற்கொலை செய்துக்கொள்கிறர். அவரது உடலை எடுத்துவரும் போது அந்த பெண்போட்டு இருந்த நகைகளை திருப்பிக் கொடுத்துவிடுவார் கிருஷ்ணா.

இதன் காரணமாக கிருஷ்ணா மீது பிந்து மாதவிக்கு காதல் ஏற்படுகிறது. அவரை துறத்தி துறத்தி காதலித்து திருமணமும் செய்துக்கொள்கிறார். இவர்களின் வாழ்க்கை அதன்பிறகு எப்படி சென்றது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Also Read… ஜன நாயகன் பட விவகாரம் சரியாகக் கையாளப்படவில்லை – பவன் கல்யாண்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வெய்ட் இஸ் ஓவர்… இன்று மாலை வெளியாகிறது சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டீசர்

Follow Us