டிசி முதல் ஜிடிஎன் வரை… நாளை பான் இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ
This Week Theatre Release Movie | பான் இந்திய மொழிகளில் ஒவ்வொரு வாரமும் புதுப் புதுப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் இந்த ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி 2026-ம் ஆண்டு பான் இந்திய மொழிகளில் வெளியாக உள்ள படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.
டிசி படம்: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழ் சினிமாவில் தற்போது நாயகனாக அறிமுகம் ஆகிறார். இவர் நாயகனாக அறிமுகம் ஆகும் படத்திற்கு டிசி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கி உள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை தெறிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள நிலையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் நாளை 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு உலகம் முழுவதும் டிசி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
துடக்கம் படம்: மலையாள சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது மகன் பிரனவ் மோகன்லால் முன்பே மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மகள் விஸ்மயா மோகன்லால் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி உள்ளர். இவரது நடிப்பில் உருவாகி உள்ள படத்திற்கு துடக்கம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப் எழுதி இயக்கி உள்ள நிலையில் நாளை 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கொரியன் கனகராஜு படம்: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் வருண் தேஜ். இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் தற்போது வெளியாகி உள்ள படம் கொரியன் கனகராஜு. இந்தப் படத்தினை இயக்குநர் மெர்லபாகா காந்தி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படம் நாளை 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.




ஓ மை டாக் படம்: இந்தி சினிமாவில் காமெடி ட்ராமா பாணியில் உருவாகி உள்ள படம் ஓ மை டாக். இந்தப் படத்தை அமித் ராய் எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது படம் நாளை 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Also Read… ப்ரோ கோட் படத்தின் டைட்டிலை இப்படி மாற்றிவிட்டோம் – ரவி மோகன் ஓபன் டாக்
ஜிடிஎன் படம்: நடிகர் மாதவன் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக அவர் சமீப காலமாக வாழ்க்கை வரலாற்று படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது ஜிடிஎன் படத்திலும் நடிகர் மாதவன் நடித்து உள்ளார். இந்தப் படம் நாளை 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Also Read… ஏஜிஎஸ் நிறுவனத்தில் அதிக லாபம் ஈட்டியது தளபதி விஜயின் படம் தான் – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி