நயன்தாரா – கவினின் ஹாய் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு? – காரணம் இதுவா?
Hi Movie Delay: நயன்தாரா மற்றும் நடிகர் கவின் நடித்துள்ள புது திரைப்படம்தான் ஹாய். இதை நயன்தாரா தனது சொந்த தயாரிப்பின் கீழ் உருவாக்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருப்பதாக வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
நடிகர் கவின் (Kavin)தமிழில் ஹீரோவாக நடித்துள்ள புத்தம் புது திரைப்படம்தான் ஹாய் (Hi Movie). இதை பாடலாசிரியராக இருந்து இயக்குநராக அறிமுகமாகியுள்ள விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்கியுள்ளார். இந்த ஹாய் படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்க, நடிகை நயன்தாரா (Nayanthara) லீட் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்திலே ஆரம்பமான நிலையில், சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை நயன்தாரா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவாக்கியுள்ளார். மேலும் இதற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் (Jen Martin) இசையமைத்துள்ளார்.
இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் புரோமோஷன் பணிகளும் ஏற்கனவே தொடங்கிய நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதியை மாற்றியமைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
இதையும் படிங்க: கில்லர் படத்தில் என்னை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ரசிகர்கள் காண்பார்கள் – நடிகை ப்ரீத்தி அஸ்ரானி
கவின் – நயன்தாராவின் ஹாய் பட ரிலீஸ் பிரச்சனை:
வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் ஹாய் படம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ரிலீஸ் தேதியோடு விஷாலின் மகுடம் மற்றும் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் போன்ற படங்களும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ஹாய் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுகிறதாம். ஆகஸ்ட் 14ம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், வேறு தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
இதையும் படிங்க: ப்ரோ கோட் படத்தின் டைட்டிலை இப்படி மாற்றிவிட்டோம் – ரவி மோகன் ஓபன் டாக்
நயன்தாரா மற்றும் கவினின் ஹாய் திரைப்பட ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து வைரலாகும் பதிவு:
#Kavin and #Nayanthara‘s #Hi was initially announced to release on August 14. However, reports now suggest that the film may be postponed and released on a different date.
The film is directed by Vishnu Edavan, a former assistant director to #LokeshKanagaraj.
Suriya’s… pic.twitter.com/tcjhFcEDo9
— Movie Tamil (@_MovieTamil) August 6, 2026
நயன்தாரா மற்றும் கவின் இணைந்து நடித்துள்ள இப்படம் ரோம்-காம் கதையில் உருவாகியுள்ளதாம். இதில் ஜென் மார்ட்டின் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக 3 பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இப்படத்தின் புது ரிலீஸ் தேதி மற்றும் ட்ரெய்லர் தொடர்பான அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



