நடிகர் விஷாலின் மகுடம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
Actor Vishals Magudam movie trailer release update | நடிகர் விஷால் எழுதி இயக்கி நாயகனாக நடித்து உள்ள படம் மகுடம். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தொடர்ந்து பலப் படங்களில் நடித்து ரசிகரக்ளிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து நாயகனாக பலப் படங்களில் நடித்து வந்த நடிகர் விஷால் அவ்வபோது படங்களை தயாரிக்கவும் செய்து வந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் அறிமுகம் ஆகிறார். அதன்படி முன்னதாக நடிகர் விஷாலின் 35-வது படத்தை வேறு ஒரு இயக்குநர் எழுதி இயக்குவதாக அறிவிக்ப்பட்டது. சில நாட்களிலேயே அவர் அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் நடிகர் விஷாலே படத்தை எழுதி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மகுடம் படத்தின் மூலமாக நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஷால் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




நடிகர் விஷாலின் மகுடம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
அதன்படி படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நாளை படத்தில் இருந்து பாடல் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வருகின்ற 7-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The Crown is Ready !!#Magudam /#Makutam Trailer from August 7th & releasing Worldwide on August 14th#DirectorVishal #SGF99 #MagudamTrailerFromAug7th #MagudamReleaseOnAug14th pic.twitter.com/YLJ0x9EjY9
— Vishal (@VishalKOfficial) August 5, 2026
Also Read… துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் – அதிகாரப்பூர்வ அப்டேட் இதோ