AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஸ்வநாத் & சன்ஸ் படம் புது அடையாளத்தை கொடுத்துள்ளது – நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

Vishwanath And Son film is a new identity to me | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்காக ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கும் நிலையில் அந்தப் படம் குறித்து அவர் நெகிழ்ந்து பேசி உள்ளார்.

விஸ்வநாத் & சன்ஸ் படம் புது அடையாளத்தை கொடுத்துள்ளது – நடிகர் சூர்யா நெகிழ்ச்சி
நடிகர் சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Aug 2026 18:13 PM IST

தமிழ் சினிமாவில் இந்த ஆகஸ்ட் மாதம் பல நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. இந்த வரிசையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் தான். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது. மேலும் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தினை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ள நிலையில் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்ற நிலையில் அந்த விழாவில் படக்குழுவினர் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் நடிகர் சூர்யா அந்த இசை வெளியீட்டு விழாவில் பல விசயங்களை பேசினார். அதில் இந்தப் படத்தில் நடித்தது குறித்து பேசியது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஸ்வநாத் & சன்ஸ் படம் புது அடையாளத்தை கொடுத்துள்ளது:

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons) படத்தைப் பார்த்த பிறகு, தயாரிப்பாளர் நாகவம்சியிடம் இந்தப் படத்தை வழங்கியதற்காக நன்றி தெரிவித்தேன். இப்படம் எனக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்துள்ளது; இதற்காக வெங்கி அட்லூரிக்கு நன்றி. இது போன்ற ஒரு படத்தில் நடித்து நீண்ட காலம் ஆகிவிட்டது. படம் முழுவதும் பார்வையாளர்களின் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்துகொண்டே இருக்கும். காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் கதாநாயகனை உயர்த்திப் பிடிக்கும் காட்சிகள் என அனைத்தும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Anupama Parameswaran: உங்களுக்கு என்னைப்பற்றி என்ன தெரியும்? செய்தியாளரை சாடிய அனுபமா பரமேஸ்வரன்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… புதுப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த கௌதம் வாசுதேவ் மேனன்

Follow Us