AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருமணம் வரை மட்டுமல்லாமல்… காதல் நிலையானதாக இருக்க வேண்டும் – நடிகர் சூர்யா

Actor Suriya love Advice to fans | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் சூர்யா நேற்று விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் காதல் குறித்து பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

திருமணம் வரை மட்டுமல்லாமல்… காதல் நிலையானதாக இருக்க வேண்டும் – நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 03 Aug 2026 11:28 AM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று கோயம்புத்தூரில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா, நடிகை மமிதா பைஜூ மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் உட்பட இயக்குநர் வெங்கி அட்லூரி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் தயாரிப்பாளர் நாக் வம்சி உட்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். அதில் பலரது பேச்சு தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பேசியது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு பல விசயங்களை பேசினார். அதிலும் குறிப்பாக சூர்யா தனது ரசிகர்களுக்கு கொடுத்த காதல் அட்வைஸ் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

காதல் நிலையானதாக இருக்க வேண்டும்:

காதல் என்பது திருமணம் வரை மட்டுமே இருக்கக்கூடியதல்ல. அது என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். 20 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட, அவர்களை ஒவ்வொரு நாளும் நீங்கள் நேசிக்க வேண்டும். அவர்களை மதிக்க வேண்டும். சூழ்நிலைகள், மனநிலைகள் மற்றும் முன்னுரிமைகள் மாறலாம்; ஆனால் உங்கள் அன்பு ஒருபோதும் மாறக்கூடாது.

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் எண்ணற்ற விட்டுக்கொடுத்தல்களைச் செய்கிறார்கள். அவர்கள் வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறார்கள். எனவே, அவர்களின் வெற்றிகளைப் பாராட்டுங்கள் மற்றும் அவர்களுக்குத் துணையாக நில்லுங்கள். அன்பை விடவும் மேலாக, அவர்களுக்குரிய மரியாதையை அளியுங்கள் என்று சூர்யா அந்த விழாவில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 48 படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் பேச்சு:

Also Read… நோ நடிப்பு… டைரக்‌ஷன் தான் – யாத்ரா தனுஷ் குறித்து வைரலாகும் தகவல்!

Follow Us