AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நானியின் தி பாரடைஸ் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

The Paradise Movie Teaser Release Update | நடிகர் நானியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தில் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நானியின் தி பாரடைஸ் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
தி பாரடைஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 01 Aug 2026 12:16 PM IST

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களிடையே மிகவும் பிரலமான நாயகனாக வலம் வருகிறார் நடிகர் நானி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் நானி தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அவ்வபோது தமிழ் சினிமாவிலும் படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் கடந்த 2008-ம் ஆண்டு சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன நிலையில் தொடர்ந்து 18 ஆண்டுகளாக பலப் படங்களில் நடித்து உள்ளார். இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு ஹிட் தி தேர்ட் கேஸ் படம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நானி நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் படம் தி பாரடைஸ். இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.

நானியின் தி பாரடைஸ் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது?

அதன்படி நடிகர் நானியின் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தி பாரடைஸ். இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த மார்ச் மாதமே இருந்தது. ஆனால் சில் காரணங்களால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தி பாரடைஸ் படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் டீசர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜன நாயகன் படத்தை எடுப்பதைவிட வெளியிடவே சிரமமாக இருந்தது – கே.வி.என். வெங்கட் நாராயணன்

தி பாரடைஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… லக்கி பாஸ்கர் 2 படம் வருமா? வராதா? இயக்குநர் வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்

Follow Us