AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அன் ஆர்டினரி மேன் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்

An Ordinary Man shooting update is viral on social media | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் ரவி மோகன் இயக்குநராக அன் ஆர்டினரி மேன் படத்தின் மூலம் அறிமுகம் ஆக உள்ள நிலையில் இந்தப் படம் குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அன் ஆர்டினரி மேன் படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் தகவல்
அன் ஆர்டினரி மேன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jul 2026 13:08 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்தப் பங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி நடிகர் ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு, ஜீனி மற்றும் பென்ஸ் என அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இந்தப் படங்களின் பட்டியலில் அடுத்ததாக எந்தப் படம் முதலில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படங்கள் தொடர்பான தகவலைப் போல நடிகர் ரவி மோகன் கடந்த 2025-ம் ஆண்டில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். மேலும் படங்களை தயாரிக்கவும் செய்து வரும் நடிகர் ரவி மோகன் தற்போது படங்களை இயக்குவதன் மூலம் இயக்குநராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன் ஆர்டினரி மேன் படத்தின் தற்போதைய நிலை என்ன?

அதன்படி இயக்குநர் ரவி மோகன் தமிழ் சினிமவில் இயக்குநராக அறிமுகம் ஆகும் படத்திற்கு அன் ஆர்டினரி மேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த 2025-ம் ஆண்டே தொடங்கிய நிலையில் தொடர்ந்து இந்தப் படம் குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி இந்த அன் ஆர்டினரி மேன் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் வரை முடிவடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Sri Sri: துல்கர் சல்மான் பர்த்டே.. ஸ்ரீ ஸ்ரீ படத்திலிருந்து வெளியான ‘வானே வானே’ பாடல்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் சூரியின் அடுத்தப் படத்தின் கதை இதுதானா? வைரலாகும் தகவல்

Follow Us