சூர்யா சாருடன் போட்டியா? ஹாய் பட ரிலீஸ் குறித்து மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு எடவன்!
Vishnu Edavan About Hi Vs Vishwanath & Sons clash தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குநராக நுழைந்தவர் விஷ்ணு எடவன். பாடலாசிரியராக அப்பணியாற்றிய இவர், நயன்தாரா மற்றும் கவின் நடிக்கும் ஹாய் படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்துள்ளார். இப்படம் சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் வெளியாகும் அதே நாளில் வெளியாகும் நிலையில், அது குறித்து மனம் திறந்துள்ளார்.
நடிகை நயன்தாராவின் (Nayanthara) நடிப்பில் கிட்டத்தட்ட 3 திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம்தான் ஹாய் (Hi Movie). இதை இயக்குநர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்க, நயன்தாராவின் ரௌடி பிக்ச்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை கவின் (Kavin) நடித்துள்ளார். எமோஷனல், காதல் கதைகளத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைக்க, இதுவரை 2 பாடல்கள் வெளியாகியிருக்கிறது. மேலும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் அதே தேதியில்தான் சூர்யாவின் (Suriya) விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and sons) படமும் வெளியாகிறது. இந்நிலையில் சூர்யாவுடன் போட்டியாக ஹாய் படம் வெளியாகுவதாக வட்டாரங்களில் பேசப்பட்டுவரும் நிலையில், அது குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் ஓபனாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: தட்டிவிடாமல் என்னை தட்டிக்கொடுங்கள்… – தேசிய விருது சர்ச்சை – முதன்முறையாக தனுஷ் விளக்கம்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் ஹாய் படம் போட்டியா என்பது குறித்து விஷ்ணு எடவன் பேச்சு:
அண்மையில் பேட்டி ஓன்றில் பேசியிருந்த விஷ்ணு எடவன், அதில், “விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் போட்டி என்பது போல இல்ல, அவரு (சூர்யா) எங்கயோ இருக்காரு, இதுல என்ன போட்டி இருக்கு. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் கூட ஹாய் படம் வருவது, அந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் இந்த படத்தை வந்து பார்ப்பார்கள். விஐபி படம் வெளியாகும்போது சதுரங்கவேடடை படம் வெளியாகவில்லையா?, அதுபோல யாரடி நீ மோகினியும் சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படமும் ஒரே நாளில்தான் வெளியாகியது.
இதையும் படிங்க: நீங்கள் என் மீது வைத்த அளவற்ற நம்பிக்கைக்கு நன்றி விஜய் சார் – அனிருத் ரவிச்சந்தர்
அது இரண்டுமே பேமிலி பொழுதுபோக்கு படம் அது ஓடவில்லையா என்ன?. நானும் அதே நம்பிக்கையில்தான் இருக்கிறேன். படம் நன்றாக இருந்தால் கட்டாயம் வந்து பார்க்கப்போகிறார்கள்” என அதில் அவர் ஓபனாக பேசியிருந்தார். மேலும் சூர்யா குறித்து புகழ்ந்தும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் போட்டியா என்பது குறித்து இயக்குநர் விஷ்ணு எடவன் பேசியது தொடர்பான வீடியோ பதிவு:
Vishnu Edavan opens up about the clash between #HI and #ViswanathAndSons..🙇🏻♂️
— Gv (@gowtham0725) July 27, 2026
நயன்தாராவின் ஹாய் திரைப்படமானது சிறப்பான பீல் குட் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படம் சூர்யாவை விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகவும் ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. மேலும் இப்படத்துடன் விஷாலின் நடிப்பில் உருவான மகுடம் திரைப்படமும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.