AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தட்டிவிடாமல் என்னை தட்டிக்கொடுங்கள்… – தேசிய விருது சர்ச்சை – முதன்முறையாக தனுஷ் விளக்கம்

சமீபத்தில் 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதும், 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்ததற்காக தனுஷிற்கு சிறந்த நடிகர் என்ற சிறப்புப் நடுவர் விருதும் அறிவிக்கப்பட்டது சர்ச்சையானது.

தட்டிவிடாமல் என்னை தட்டிக்கொடுங்கள்… – தேசிய விருது சர்ச்சை – முதன்முறையாக தனுஷ் விளக்கம்
தனுஷ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 26 Jul 2026 20:00 PM IST

சமீபத்தில் 72வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதும், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்ததற்காக தனுஷிற்கு சிறந்த நடிகர் என்ற சிறப்பு நடுவர் விருதும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழில் சிறந்த படங்கள் வெளியாகியிருந்தும் ராயன் மற்றும் கேப்டன் மில்லர் படத்துக்கு விருது வழங்கப்பட்டது சர்ச்சையானது.

தேசிய விருது சர்ச்சைக்கு முதன்முறையாக தனுஷ் விளக்கம்

இதுகுறித்து தனுஷ் முதன்முறையாக மனம் திறந்துள்ளார். இதுகுறித்து ஜூலை 26, 2026 இன்று ரசிகர் மன்ற நிகழ்வில் அவர் பேசியதாவது, ராயன் திரைப்படத்துக்கு தேசிய விருது தானாக கிடைத்தது. தமிழனாக எனக்கு மேலும் 2 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. தட்டிவிடாமல் என்னை தட்டிக்கொடுங்கள். புதுப்பேட்டை, வடசென்னை, மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களுக்கு விருது கிடைக்கவில்லை. அப்போது யாரும் ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை என கேட்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிக்க : தனுஷின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் ஓம் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் – அப்டேட் இதோ!

வைரலாகும் தனுஷ் பேசிய வீடியோ

 

மேலும் பேசிய அவர், அந்த வருடம் ராயனை படத்தை விட  நல்ல படங்கள் வெளியாகின. அந்த படங்களின் ரசிகர்கள் அதற்கான அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். அதை நான் முழுமையாக மதிக்கிறேன். என்னுடைய படம் அது ஒரு கனா காலம் வெளியானது. அப்போ நான் சின்ன பையன். அந்தப் படத்துக்கு எனக்கு தேசிய விருது கிடைக்கும்னு சொன்னாங்க. சின்ன பையன் நான் ஆசையாக காத்திருந்தேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை என்றார்.

இதையும் படிக்க : ஜன நாயகன் பட இயக்குநரை நேரில் சந்தித்த ஜேசன் சஞ்சய் – வைரலாகும் வீடியோ!

மேலும் பேசிய அவர், அதன் பிறகு புதுப்பேட்டை படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் என எல்லோரும் சொன்னார்கள். ஆனாலும் அப்போது எனக்கு கிடைக்கவில்லை. அதன் பிறகு 3, மயக்கம் என்ன, மரியான், வடசென்னை, கர்ணன் ஆகிய படங்களுக்கும் கிடைக்கவில்லை. ஒரு சில விஷயங்கள் நாம் எவ்வளவு முயன்றாலும் நடக்காது. தானாகத் தான் நடக்கும். அந்த மாதிரி இந்த முறை எனக்கு தானாக அமைந்தது. இந்த படத்துக்காக என்னுடைய உழைப்பு உண்மையானது. ஒரு தமிழனாக எனக்கு 2 தேசிய விருது கிடைத்திருக்கிறது என்றார்.

Follow Us