தேசிய விருதுகள் அறிவிப்பு – ராயன், மெய்யன் படங்களுக்கு விருது- விவரம் இதோ
2024 ஆம் ஆண்டுக்கான 72 வது தேசிய திரைப்பட விருதுகள் பெறும் வெற்றியாளர்களை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படமாக தனுஷ், இயக்கி நடித்த ராயன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் பெறும் வெற்றியாளர்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த விருதுகளால் கௌரவிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தமிழ் கலைஞர்களுக்கு கிடைத்த தேசிய விருதுகள்
- இந்த நிலையில் இந்த 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படமாக தனுஷ், இயக்கி நடித்த ராயன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- மேலும் தமிழ் திரைப்படமான ‘மெய்யழகன் ஸ்பெஷல் மென்ஷன் என குறிப்பிடப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருது தமிழ் படமாக ப்ளூ என்ற படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை ஒலி வடிவமைப்பாளர் டி.எஸ்.ஹரிஹர சுதன் பெறவிருக்கிறார்.
- மேலும் சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருது சிவகார்த்திகேயனின் அமரன் படத்துக்காக ஆர்.கலைவாணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறந்த திரைப்பட இசையமைப்பாளருக்கான விருது அமரன் படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் குமார் பெறவிருக்கிறார்.
- மேலும் சிறந்த சண்டைப்பயிற்சிக்காக விஜய் சேதுபதியின் மகாராஜா படத்துக்காக சண்டை பயிற்சி கலைஞர் அனல் அரசு பெறுகிறார்.
- சிறந்த திரைப்பட இயக்குநர் என்ற விருதை அமரன் படத்துக்காக ராஜ்குமார் பெரியசாமி பெறவிருக்கிறார்.
- தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படமாக தனுஷின் கேப்டன் மில்லர் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சிறந்த துணை நடிகைக்கான விருதை விஜய் சேதுபதியின் மகாராஜா படத்துக்காக சாச்சனா நமிதாஸ் பெறுகிறார்.
இதையும் படிக்க : நிவின் பாலி – மமிதா பைஜூவின் பெத்லகேம் குடும்பா யூனிட் பட ரிலிஸ் எப்போது? வெளியான அறிவிப்பு இதோ!
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ் குமார்
An immense blessing for third time ❤️🥺🙏 grateful 🥺🙏 #amaran my third ❤️ pic.twitter.com/nj0PtiJIlD
— G.V.Prakash Kumar (@gvprakash) July 18, 2026
மேலும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பிரம்மயுகம் படத்துக்காக மம்மூட்டி பெறவிருக்கிறார். சிறந்த நடிகைக்கான விருதை ஆர்டிக்கள் 370 படத்துக்காக யாமி கவுதம் பெறவிருக்கிறார். சிறந்த துணை நடிகருக்கான விருதை பஷக் படத்துக்காக சஞ்சய் மிஷ்ராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார். சிறந்த குழந்தைகள் படமாக தெலுங்கு படமான சின்ன கத காது என்ற படம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சிறந்த படமாக பாலிவுட் படமான ஆர்டிக்கிள் 370 படம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக 2898 ஏடி என்ற படம் பெற்றுள்ளது.
இதையும் படிக்க : Atharvaa: அந்த ஒரு பாட்டு உண்மையிலே கலங்கிவிட்டேன்.. அப்பாவுக்கு செய்த மரியாதை இதயம் முரளி படம் – அதர்வா!
இந்த நிலையில் 3வது முறையாக அமரன் படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், என் மீது நம்பிக்கை வைத்து, இந்த அழகான திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சிறப்பான பயணத்தில் எனக்கு உறுதுணையாக நின்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.