AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Atharvaa: அந்த ஒரு பாட்டு உண்மையிலே கலங்கிவிட்டேன்.. அப்பாவுக்கு செய்த மரியாதை இதயம் முரளி படம் – அதர்வா!

Atharvaas Emotional Speech: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக தொடர்ந்து புது படங்களை கொடுத்துவருபவர் அதர்வா. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வரவேற்கப்படும் படம் இதயம் முரளி. இப்படத்தின் வெற்றிவிழா இன்று நடைபெற்றிருந்த நிலையில், அதில் தனது தந்தை முரளிக்கு இப்படத்தை சமர்ப்பிப்பதாக அதர்வா தெரிவித்துள்ளார்.

Atharvaa: அந்த ஒரு பாட்டு உண்மையிலே கலங்கிவிட்டேன்.. அப்பாவுக்கு செய்த மரியாதை இதயம் முரளி படம் – அதர்வா!
அதர்வாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Jul 2026 21:27 PM IST

நடிகர் அதர்வா (Atharvaa) நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் இதயம் முரளி (Idhayam Murali). இந்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்க, இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆகாஷ் பாஸ்கரன் (Aakash Baskaran) இயக்கியிருந்தார். இப்படத்தின் மூலமாகவே இவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருதலை காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருந்த இப்படமானது, கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இதில் அதர்வா நடிக்க அவருடன், கயாடு லோஹர் (Kayadu Lohar), பிரீத்தி முகுந்தன் (Preity Mukuhndhans), அஞ்சு குரியன், நிஹாரிகா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மேலும் இதில் நடிகை மாளவிகா மோகனனும் (Malavika Mohanan) கேமியோ வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படமானது திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டுவரும் நிலையில், இன்று 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியில் படக்குழு வெற்றி விழாவை கொண்டாடியுள்ளது. அந்த விழாவின்போது மேடையில் பேசிய அதர்வா, இதயம் முரளி படத்தை தனது தந்தை முரளிக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜின் மிஸ்டர் பாரத் பட ரிலீஸ் எப்போது தெரியுமா? – நகைச்சுவையுடன் வெளியான புரோமோ!

இதயம் முரளி பட வெற்றிவிழாவில் அதர்வா பேசிய விஷயம்:

அந்த நிகழ்ச்சியில் பேசிய அதர்வா, ” என் அப்பாவுக்கு (முரளி) எதாவது ஒருவகையில் சமர்ப்பணம் செய்யவேண்டும் என நினைத்தேன். அப்போதுதான் ஆகாஷ் பாஸ்கரன் வந்தார், ஒரு நல்ல நண்பரானார். நண்பராக இதை செய்து முடித்தார். என் அப்பாவுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக அழகாக அமைந்துவிட்டது. இப்படத்தில் சின்னி ஜெயந்த் பேசிய வசனங்கள் என்னை ரொம்பவே ஈர்த்தது. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா பாடலும் எனது கண்ணு கலங்கிவிட்டது. அந்த படத்தை பார்த்த எனது குடும்பத்தின் அனைவரும் கலக்கிவிட்டனர்” என அதில் அவர் எமோஷனலாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: அடியே என் பூந்தேனே.. ஜன நாயகன் பட புதிய பாடலை வெளியிட்ட படக்குழு!

இதயம் முரளி படத்தின் சக்ஸஸ் சந்திப்பு குறித்து படக்குழு பகிர்ந்த பதிவு:

அதர்வாவின் தந்தை முரளி:

நடிகர் அதர்வாவின் தந்தைதான் நடிகர் முரளி. இவர் 80ஸ் மற்றும் 90ஸ் படங்களில் நாயகனாக நடித்து பிரபலமானவர். பின் தனது மகனான அதர்வாவின் பானா காத்தாடி பாடத்தில் இறுதியாக நடித்தார். இப்படம் வெளியான சில நாட்களிலே அவர் இறந்துவிட்டார். இவரின் நடிப்பில் 1991ல் வெளியான படம்தான் இதயம். இப்படத்தின் மூலமாக அவருக்கு இதயம் முரளி என்ற பெயரும் கிடைத்தது. அதையே அதர்வா ஒரு படத்தின் டைட்டிலாக வைத்து நடித்து ஹிட் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us