லோகேஷ் கனகராஜின் மிஸ்டர் பாரத் பட ரிலீஸ் எப்போது தெரியுமா? – நகைச்சுவையுடன் வெளியான புரோமோ!
Mr Bhaarath Movie : தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் மிஸ்டர் பாரத். இதில் நடிகர் பாரத் நடித்துள்ள நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த ஃபன் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). இவர் இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் படத்தில் அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் (Arun Matheswaran) இயக்கத்தில், டிசி (DC Movie) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்குநர், நடிகர் மற்றும் பணியாற்றிவருகிறார். இவரின் தயாரிப்பில் தமிழில் உருவாகிவரும் புது படம்தான் மிஸ்டர் பாரத் (Mr.Bhaarath). இந்த படத்தில் நடிகர் பாரத் (Bhaarath) ஹீரோவாக நடிக்க, நடிகை சம்யுக்தா (Samyuktha) இணைந்து நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு ஷூட்டிங் தொடங்கிய நிலையில், கடந்த 2026ம் ஆண்டு தொடக்கத்தில் ஷூட்டிங் நிறைவடைந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதிசெய்துள்ளது. இது குறித்த காமடி புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: இதயம் முரளியின் முதலில் இசையமையவிருந்தவர் அவர்தான்.. அந்த வாய்ப்பை நான் பறித்தேன் – தமன்!
லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் பாரத் பட ரிலீஸ் எப்போது:
The wait is almost over.
A fun-filled ride is all set to begin.#MrBhaarath releases worldwide from October 1 😀🥳Release Date Promo : https://t.co/CWAYgSY309…@Bhaarath_Offl @samyukthavv @Niranjan_Dir @Dir_lokesh @Sudhans2017 @Jagadishbliss @PassionStudios @GSquadOffl…
— GSquad (@GSquadOffl) July 17, 2026
மிஸ்டர் பாரத் படத்தின் ரிலீஸ் தேதி:
இந்த மிஸ்டர் பாரத் திரைப்படமானது காதல் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் பாரத்துடன் நடிகை சம்யுக்தா இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தை படக்குழு வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மிஷ்டர் பாரத் படக்குழு :
இதில் நடிகர் பாரத் ஹீரோவாக நடித்துள்ளார், இவர் ஏற்கனவே லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனின் நண்பனாக நடித்திருந்தார். அதையடுத்து இவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புது படம்தான் மிஸ்டர் பாரத். இந்த படத்தை அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: ஆக்ஷன் நாயகியாக சமந்தா நடிப்பில் ஓடிடியில் வெளியான மா இண்டி பங்காரம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
மேலும் இதை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து இதுவரை 2 பாடல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.